காந்தி கிராமத்திற்கு துணை ஜனாதிபதி வருகை
- காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு துணை ஜனாதிபதி வருகைக்காக, பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- திண்டுக்கல் மாவட்ட காந்திகிராம பல்கலையில், வரும் 28ல் பட்டமளிப்பு விழா நடக்கிறது. விழாவில் பல்கலை வேந்தரான, துணை ஜனாதிபதி அமீது அன்சாரி பங்கேற்கிறார். அன்று காலை மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வரும் அவர், அம்பாத்துரையில் உள்ள இறங்கு தளத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பல்கலை விருந்தினர் இல்லத்திற்கு வருகிறார்.
- துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில நாட்களில், தேசிய பாதுகாப்பு படையினர், காந்தி கிராமத்திற்கு வருகின்றனர்.
- இவர்கள், பல்கலை வளாகம் மற்றும் விழா நிகழ்விடம் ஆகியவற்றையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்வர். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் வந்து இறங்கும் ஒத்திகை நடைபெறவுள்ளது.