காமன்வெல்த் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு
காமன்வெல்த் ஜோதிக்கு தில்லி தலைமைச் செயலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி லண்டனில் ராணி எலிசபெத்தால் தொடங்கி வைக்கப்பட்ட காமன்வெல்த் ஜோதி, உலகின் 71 நாடுகளில் பயணம் செய்து பாகிஸ்தானின் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சென்ற இந்த ஜோதி, வியாழக்கிழமை தில்லி வந்தது. தில்லியின் பல்வேறு இடங்களுக்குச் சென்ற இந்த ஜோதி வெள்ளிக்கிழமை காலையில் தில்லி தலைமைச் செயலகம் வந்தது. அங்கு காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழு இணை இயக்குநரிடம் இருந்து ஜோதியை தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பெற்றுக்கொண்டார். ஜோதி தலைமைச் செயலகம் வந்தபோது ஷீலா தீட்சித் தலைமையிலான அமைச்சரவை சகாக்கள், எம்.எல்.ஏ.க்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் திரண்டிருந்து வரவேற்றனர்.
இந்த ஜோதி சனிக்கிழமை தில்லியின் பல்வேறு பகுதிகளில் வலம் வரும். போட்டி தொடங்கும் ஞாயிற்றுக்கிழமையன்று தொடக்க விழா நடைபெறும் ஜவாஹர்லால் நேரு மைதானத்திற்கு வந்தடையும். அதன்பிறகு தொடக்க நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஜோதியை ஏந்திச் செல்வர்.
No comments:
Post a Comment