Tuesday, October 5, 2010

online tamil news

காமன்வெல்த்: இந்தியாவுக்கு 5 தங்கம்


  • காமன்வெல்த் போட்டியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு 5 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. இதன்மூலம் மொத்தம் 11 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
  • மல்யுத்தம்: மல்யுத்தத்தில் 3 பிரிவுகளுக்கான போட்டிகள் அனைத்திலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. கிரேக்க ரோமன் 60 கிலோ, 74 கிலோ மற்றும் 96 கிலோ பிரிவு போட்டிகளில் ரவீந்தர் சிங், சஞ்சய் மற்றும் அனில் குமார் முறையே தங்கம் வென்று இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்தனர்.
  • துப்பாக்கிச் சுடுதல்: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா - ககன் நரங் ஜோடி தங்கம் வென்றதுடன் புதிய சாதனையும் படைத்தது. அதேபோல் மகளிர் பிரிவில் ரஹி சர்னோபட் மற்றும் அனிஷா சய்யத் ஜோடியும் புதிய சாதனையுடன் தங்கம் வென்றது. 

No comments:

Post a Comment