Tuesday, August 31, 2010


தமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்

      மூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன. 

           எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன.யாரெல்லாம் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்? 

         பயிற்சிக்கு விண்ணப்பிக்க என்ன நடைமுறை?விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய இடம்

         மேற்கண்ட பயிற்சிகளை நடத்தும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 42/25, ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ் இரண்டாவது தளம் (வி.ஜி.பி. அருகில்), அண்ணா சாலை, சென்னை -600 002. தொ.பே.: 044- 2852 7579, 2841 4736, 98401 16957.சி.ரங்கநாதன், இயக்குநர், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 93822 66724. 


அன்னை தெரசாவுக்கு அஞ்சல் தலை



அன்னை தெரசாவுக்கு அஞ்சல் தலை: அமெரிக்கா வெளியிடுகிறது

         அன்னை தெரசாவை கெளரவிக்கும் வகையில் அமெரிக்க அஞ்சல் துறை அவருக்கு செப்டம்பர் 5-ம் தேதி அஞ்சல்தலை வெளியிடுகிறது.
 
          மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 1979-ல் நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசாவுக்கு அஞ்சல் தலைமூலம் பாராட்டு தெரிவிக்க உள்ளதாக அமெரிக்க அஞ்சல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
      வாஷிங்டனில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட உள்ளது.கொலராடோவில் ஓவியர் தாமஸ் பிளாக்ஷிர் வரைந்த அன்னை தெரசாவின் உருவப்படம் இந்த அஞ்சல் தலையில் இடம்பெற்றிருக்கும்.

வேலை வாய்ப்பு செய்திகள்

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் 
  • பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பி.உமாநாத் தெரிவித்துள்ளார்.  
  •   பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு | 150ம், பிளஸ் 2 படித்தவர்களுக்கு | 200ம், பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கு | 300மாக மாதந்தோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக தமிழக அரசு வழங்குகிறது. 
  •  வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் கூடுதலாக காத்திருப்போர், குடும்ப ஆண்டு வருவாய் | 50 ஆயிரத்திற்கு மிகாமல், 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


Monday, August 30, 2010

வேலூர் மாவட்ட செய்தி

நிர்வாகிகள் தேர்வு
         தமிழ்நாடு வேளாண்மைத் துறை நிர்வாகப் பணியாளர் சங்கத்தின் வேலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
       மாவட்டத் தலைவர் தி.தயாளன், துணைத் தலைவர் வ.லியாகத் அலி, செயலாளர் வி.சரவணமூர்த்தி, இணைச் செயலாளர் சு.சுரேஷ், பொருளாளர் ஆ.வி.செந்தில்குமார், அமைப்புச் செயலாளர் இரா.சீனிவாசன், பிரசாரச் செயலாளர் ஏ.சீனிவாசன் ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் எஸ்.சேகர் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

வேலைவாய்ப்பு செய்திகள்

காவல் துறையில் புகைப்படக்காரர் பணி 
  • காவல் துறையில் காவல் புகைப்படக்காரர் மற்றும் உதவியாளர் பணிகளுக்குத் தகுதியானவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை சரிபார்க்கலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காந்தி கூறியுள்ளார். 
  • காவல்துறையில் காவல் புகைப்படக்காரர் பணி காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ போட்டோகிராபி முடித்து மூன்று ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். எஸ்.டி., எஸ்.சி. பிரிவினர் 40 வயதும், எம்.பி.சி., பி.சி.ஓ. பிரிவினர் 37 வயதும், பொதுப் பிரிவினருக்கு 35 வயதும் நிரம்பியிருக்க வேண்டும்.
  • மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி மற்றும் டிப்ளமோ இன் சிவில் என்ஜினியரிங் முடித்திருத்தல் வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 35-வயதும், எம்.பி.சி., பி.சி.ஓ. மற்றும் பொதுப்பிரிவினருக்கு 30 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் செப்டம்பர் 2-ம் தேதிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொண்டு பதிவை உறுதி செய்துக்கொள்ளலாம் .   

வேலை வாய்ப்பு செய்திகள்

   செப்டம்பர் 19-ல் பாதுகாப்பு சேவை தேர்வு      

              மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வு செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ளது.

              தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அனுமதி சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு அனுமதிக்கப்படாத மாணவர்களுக்கு அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு நிராகரிப்பு கடிதங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.எந்த ஒரு தகவலும் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், வேலை நாள்களில் மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணைத்தின் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.011-2307 4458 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ, 011-2334 7310 என்ற எண்ணுக்கு ஃபேக்ஸ் அனுப்பியோ தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

        தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்த விரிவான தகவல்கள் மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின்  ‌w‌w‌w.‌u‌p‌sc.‌g‌o‌v.‌i‌n ​  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

 

படிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை


           கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு, 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி இல்லை  என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
 
           சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம், ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டலம் சார்பில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 643 மாணவ, மாணவிகளுக்கு | 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கி, அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது: 
 

விண்வெளியில் 553 நாட்கள் உயிரோடு இருந்த பாக்டீரியாக்கள்

தெற்கு இங்கிலாந்தின் கடலோரத்தில் சிறிய மலைப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட பாக்டீரியாக்கள் காற்றே இல்லாத விண்வெளியில் சுமார் 553 நாட்கள் உயிரோடு இருந்து, பல்கிப் பெருகி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளன.

இங்கிலாந்தின் டெவோன் பகுதியில் பீர் எனப்படும் கிராமத்தின் கடலோர மலைப் பகுதியில் இருந்து எடுக்கபட்ட கற்களில் ஒட்டியிருந்த இந்த பாக்டீரியாக்கள் விண்ணில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்தின் வெளியே 2008ம் ஆண்டில் அந்த கற்களோடு சேர்த்து வைக்கப்பட்டன.

காற்றில்லாத, கதிர்வீச்சு நிறைந்த, கடும் வெப்ப மாறுபாடுகள் நிறைந்த அந்த வெற்றிட சூழலில் இவை எத்தனை நாட்கள் உயிரோடு தாக்குப் பிடிக்கின்றன என்பதை ஆராய்ந்தனர்.

ஆனால், சுமார் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து, இந்த பாக்டீரியாக்களில் ஏராளமானவை உயிரோடு உள்ளன. அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் ஆரம்பித்து அனைத்து விதமான அபாயகரமான கதி்ர்வீச்சுக்கள், கடும் வெப்பம்-மிகக் கடுமையான குளிர் என பல சுற்றுச்சூழல் தாக்குதல்களை இவை எப்படித் தாக்குப் பிடித்தன என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோஸின்தஸிஸ் எனப்படும் சூரிய ஒளியைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜனைத் தயாரித்துக் கொள்ளும் .

இதன்மூலம் பூமிக்கு உயிர் வேறு கிரகத்தில் இருந்து தான் வந்தது என்ற 'தியரிக்கு' அதிக பலம் கிடைத்துள்ளதாக நாஸா கூறியுள்ளது. நுண்ணிய உயிர்கள் விண் கற்களில் ஒட்டிக் கொண்டு கிரகங்களை விட்டு கிரகங்கள் பயணிப்பது சாத்தியமே என்பதை இந்த பாக்டீரியாக்கள் நிரூபித்துவிட்டன என்கிறார்கள்.

இப்போது பூமிக்கு கொண்டு வரப்பட்டுவிட்ட இந்த பாக்டீரியாக்கள் இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் பல்கலைக்கழகத்தில் (Open University (OU) in Milton Keynes) ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த பாக்டீரியாக்களின் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் வெளியிடப்படவில்லை. 'OU-20' என்று மட்டுமே குறிப்பிடப்படும் இந்த பாக்டீரியா 'Gloeocapsa' என்ற பாக்டீரியாவைப் போன்றே தடினமான செல் சுவர் கொண்டது.

இவை வி்ண்வெளியில் இத்தனை காலம் தப்பியதற்கு அதன் தடிமனான செல் சுவரும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். மேலும் இந்த பாக்டீரியாக்கள் கூட்டாக இணைந்து காலனியாக மாறி, அதன் நடுப் பகுதியில் இருந்த பாக்டீரியாக்களை கடும் வெப்பம், கதிர்வீச்சில் இருந்து காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அத்தோடு கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வாழ்வதற்கான சத்துக்களை இவற்றின் டி.என்.ஏக்கள் தயாரித்திருக்கலாம் என்று தெரிகிறது.

Sunday, August 29, 2010

வேலூர் நகரின் சிறப்பு

          வேலூர் மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களையும், பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகளையும், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பிரதேசங்களையும் கண்கவர் சுற்றுலாதலங்களையும், பக்தி பரவசமூட்டும் ஆன்மிக திருக்கோயில்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. ஆசியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வு மையம் இங்கு உள்ளது.

         காவலூர், உலகப்புகழ் பெற்ற கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி, வேலூர் கோட்டை மற்றும் அகழி, வளர்ந்து வரும் வனவிலங்கு சரணாலயமான அமிர்திகாடு ஆகியவை மாவட்டத்தின் சிறப்புகள்.

பரப்பளவு : 6077 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை : 3,4,77,317
உயரம் : கடல் மட்டத்தில் இருந்து 216மீ
மழை அளவு : 922.4 மி.மீ(ஆண்டிற்கு)

 

சென்னை சுற்றுலா

கோட்டை அருங்காட்சியகம்:
Hotel image
லைமை செயலகத்திற்கு அருகே அமைந்துள்ள கோட்டை அருங்காட்சியகம் முதலில் கோட்டை ராணுவ அதிகாரிகளின் உணவருந்தும் இடமாக இருந்தது. பின்னர் அது பாங்காக உருவெடுத்தது. தற்போதைய ஸ்டேட் பாங்கின் முன்னோடி இதுதான். 1796ல் இது கலங்கரை விளக்கமாவும் செயல்பட்டது. 1948 முதல் கோட்டை அருங்காட்சியகமாக இயங்கி வரும் இதில் சென்னை நகரை உருவாக்கியவர்களின் மூல கையெழுத்து பிரதிகள், பழங்கால காசுகள், வெள்ளிப் பொருட்கள், சீருடைகள் ஆகியவை உள்ளன.

சென்னை சுற்றுலா

வேடந்தாங்கல்:
Hotel image
சென்னையிலிருந்து 85 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. குறிப்பாக நவம்பர் முதல் பிப்ரவரி வ�யான காலத்தில் அதிக அளவில் பறவைகள் வருகின்றன. இது இந்தியாவின் மிகப் பெரிய பறவைகள் சரணாலயமாக

சென்னை நகரின் சிறப்பு

          

இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். தென் இந்தியாவின் நுழைவு வாயில். தமிழ்நாட்டின் தலைநகர். இந்தியாவின் சிறந்த துறைமுக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது. சிறந்த கலை, கலாசார மற்றும் பண்பாட்டு மையமாக விளங்குகிறது. உலகின் இரண்டாவது நீண்ட, அழகிய கடற்கரை (மெரினா) உள்ள நகரம். இந்திய நகரங்கள் மட்டுமல்லாமல் உலக நாடுகளுடனும் சிறந்த போக்குவரத்துத் தொடர்பு.

பரப்பளவு : 174 சதுர கிலோ மீட்டர்
மக்கள் தொகை : 70 லட்சம்.
உயரம் : கடல் மட்டம்
மழை அளவு : 1272 மி.மீட்டர் (ஆண்டு சராசரி).
பேசப்படும் மொழிகள் : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, ஆங்கிலம்.

Saturday, August 28, 2010

இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்குப் பயிற்சி

             ஆம்பூர் -  திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம் ஆம்பூர் கன்கார்டியா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் வெள்ளிக்கிழமை துவங்கியது.

          இம்முகாமை கன்கார்டியா மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜேபஸ் சந்திரசேகரன் தொடங்கி வைத்தார். 

       மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெ. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.


இணைய தளத்தில் ஆங்கில ஆசிரியர் தெரிவு பட்டியல்

        ஆங்கில பாடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பட்டியல்   www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

      இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியிருப்பது:2009-10-ம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் பாடங்களுக்கான தாற்காலிகத் தெரிவு பட்டியல் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது.

      தமிழ், வரலாறு பாடங்களுக்கான ஆசிரியர்களின் பட்டியல் கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆங்கில பாடத்துக்கான தகுதியுடைய பட்டதாரி ஆசிரியர்களின் தாற்காலிக தெரிவு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

1,350 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி

           நாட்டில் இப்போது 1,350 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாகவுள்ளன.  பல்வேறு போலீஸ் உயர் பணிகளில் உள்ள அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் போட்டித் தேர்வு நடத்தி இதன் மூலம் 70 அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு செய்யப்படுகின்றனர். இதன்மூலம் ஆண்டுதோறும் பயிற்சி முடித்து வெளியே வரும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 150 என உயர்ந்துள்ளது என்றார் அவர்.

முத்தாயம்மாள் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

        ராசிபுரம் -  தென்மண்டல வேலைவாய்ப்பு முகாம் பயிற்சி வாரியம், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் ஆக. 28-ல் நடைபெறுகிறது.

       டாடா கன்சல்டன்சி நிறுவனத்தினர் 2009-10-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்கின்றனர்.2009-10-ம் ஆண்டுகளில் பிஇ பாடப் பிரிவில் கணிப்பொறி, தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை உள்ளிட்ட மாணவர்களுக்கும், எம்சிஏ., எம்எஸ்சி., எம்இ., எம்டெக் பயின்ற அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.

       மாணவ, மாணவியர்கள் 10 வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்ட படிப்பில் குறைந்த பட்சம் 60 சத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 

       ஆறு மாதங்களுக்குள் ஏற்கனவே டிசிஎஸ் நிறுவன வேலைவாய்ப்பு தேர்வு முகாமில் பங்கேற்றிருக்கக் கூடாது.  ஆன்லைனில் பெயரை பதிவு செய்தவர்களும், பதிவு செய்யாதவர்களும் பங்கேற்கலாம்.  இவர்கள் நேர்காணல் மற்றும் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வுச் செய்யப்படவுள்ளனர்.

அன்னை தெரசா நாணயம் வெளியீடு

         அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயம் இன்று வெளியிடப்பட்டது.

        தில்லியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், அவரது உருவம் கொண்ட 5 ரூபாய் நாணயத்தை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பெற்றுக்கொண்டார்.
 
        இந்நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் பேசுகையில், "அன்னை என்கிற வார்த்தைக்கு முழுமையான மற்றும் உண்மையான அர்த்தமாக விளங்கியவர் தெரசா. 

        அன்னை தெரசா கொல்கத்தாவில் தனது சேவைப் பணியை 5 ரூபாயுடன் தான் தொடங்கினார் என்று நாணயம் வெளியீட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tuesday, August 24, 2010

"வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு'



  • மதுரை, ஆக. 19: 2006, 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புதுப்பித்தல் சலுகையை வழங்கியும், 2009-ம் ஆண்டில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு பதிவை புதுப்பித்துக்கொள்ள ஒரு சிறப்புச் சலுகையையும் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  •   இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள், 4-10-2010-க்குள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.    இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். 

  • 2006-ம் ஆண்டுக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.   

  • ஏற்கெனவே மேற்கூறிய ஆண்டுகளில் சலுகையின் அடிப்படையில் புதுப்பித்த பதிவுதாரர்களும், மீண்டும் ஒருமுறை இச்சிறப்புச் சலுகையின் அடிப்படையில் புதுப்பித்துக்  கொள்ளலாம்.   

  • 4-10-2010-க்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.   2006, 2007, 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் அதன் பிறகு பழைய பதிவு மூப்பின்றி மறுபதிவு செய்திருந்தாலும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.  

இத்தகவலை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பிச்சம்மா ஆறுமுகம் ஓர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் சர்வதேச மாநாட்டில் 12 வயது கணிதப் புலி

ஹைதராபாதில் நடைபெறும் சர்வதேச கணிதவியலாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து சாதனை படைத்துள்ளார்.  

ஹைதராபாதில் கடந்த 19-ல் துவங்கிய இந்த மாநாடு வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட கணித அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.  

இவர்களுக்கு மத்தியில் விளையாட்டாக சுற்றித் திரியும் 12 வயதுச் சிறுமி காவ்யா ஜெயராம், சில நாள்களுக்கு முன்பு "இன்டெகர் பார்ட்டிஷனிங்' (ஐசபஉஎஉத டஅதபஐபஐஞசஐசஎ) குறித்து தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தபோது கணிதவியல் ஜாம்பவான்கள் எல்லாரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர். 

  ஆனால், இதெல்லாம் சாதாரணம், காவ்யாவின் ஆய்வு முடிவுகள், சர்வதேச எண் கணித இதழில் ஏராளம் வெளிவந்துள்ளன என்று  கூறுகிறார்.    காவ்யாவின் குடும்பத்தினர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். 

 ஐந்து வயதில் அவர் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டார். 7 வயதில் உயர் கல்வியை முடித்து விட்டார். இப்போது கல்லூரியில் படித்து வரும் காவ்யா, சிறு வயது முதல் கணக்கையே முழுநேர உணவாக உண்டு வாழ்கிறாள்.  "வீட்டில் அவருக்கு யாரும் எதுவும் கற்றுக் கொடுப்பதில்லை. 

  தாய்மொழியான தமிழில் காவ்யாவுக்கு எழுதவும், படிக்கவும் தெரியும். ஆனால், சரளமாகப் பேச வராது என்று கவலைப்படுகிறார் சுபத்ரா.  மலைமலையாக குவியும் பாராட்டுகளைக் கண்டுகொள்ளாமல் மான்குட்டியாகத் துள்ளித் திரியும் காவ்யா, மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்துகிறார்.   "குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை கணக்கு என்றால் ஏன் கசக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. 

  சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனத்தில் படிக்க விரும்புவதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவில் உள்ள பெர்க்கிலே அல்லது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.  கணிதம் மட்டுமன்றி இசையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறாள் காவ்யா.

வணக்கம்

உலக தமிழர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். இந்த தளத்தின் மூலம் என்னுடைய கருத்துக்களை தங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.