Tuesday, August 24, 2010

"வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு'



  • மதுரை, ஆக. 19: 2006, 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புதுப்பித்தல் சலுகையை வழங்கியும், 2009-ம் ஆண்டில் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு பதிவை புதுப்பித்துக்கொள்ள ஒரு சிறப்புச் சலுகையையும் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  •   இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள், 4-10-2010-க்குள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.    இச்சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். 

  • 2006-ம் ஆண்டுக்கு முன் புதுப்பிக்கத் தவறியவர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.   

  • ஏற்கெனவே மேற்கூறிய ஆண்டுகளில் சலுகையின் அடிப்படையில் புதுப்பித்த பதிவுதாரர்களும், மீண்டும் ஒருமுறை இச்சிறப்புச் சலுகையின் அடிப்படையில் புதுப்பித்துக்  கொள்ளலாம்.   

  • 4-10-2010-க்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.   2006, 2007, 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் அதன் பிறகு பழைய பதிவு மூப்பின்றி மறுபதிவு செய்திருந்தாலும். இந்தச் சலுகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.  

இத்தகவலை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பிச்சம்மா ஆறுமுகம் ஓர் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment