ராசிபுரம் - தென்மண்டல வேலைவாய்ப்பு முகாம் பயிற்சி வாரியம், ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் ஆக. 28-ல் நடைபெறுகிறது.
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தினர் 2009-10-ம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்கின்றனர்.2009-10-ம் ஆண்டுகளில் பிஇ பாடப் பிரிவில் கணிப்பொறி, தகவல் தொழில்நுட்பம், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் துறை உள்ளிட்ட மாணவர்களுக்கும், எம்சிஏ., எம்எஸ்சி., எம்இ., எம்டெக் பயின்ற அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
மாணவ, மாணவியர்கள் 10 வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்ட படிப்பில் குறைந்த பட்சம் 60 சத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்குள் ஏற்கனவே டிசிஎஸ் நிறுவன வேலைவாய்ப்பு தேர்வு முகாமில் பங்கேற்றிருக்கக் கூடாது. ஆன்லைனில் பெயரை பதிவு செய்தவர்களும், பதிவு செய்யாதவர்களும் பங்கேற்கலாம். இவர்கள் நேர்காணல் மற்றும் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வுச் செய்யப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment