Thursday, September 30, 2010

online tamil news



  எஸ்எம்எஸ் அனுப்ப நாளை வரை தடை நீட்டிப்பு
  • அயோத்தி ராமஜன்மபூமி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவிருப்பதை முன்னிட்டு மொத்தமாக எஸ்எம்எஸ், எம்எம்எஸ் அனுப்ப விதிக்கப்பட்டிருந்த தடை நாளைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து தடையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதாக தொலைத்தொடர்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அயோத்தி தீர்ப்பை முன்னிட்டு மதரீதியாக விருப்பு, வெறுப்புகளைத் தூண்டிவிடலாம் என்பதால் அதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 29, 2010

online tamil news

அயோத்தி: ராமர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

  •  அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு கூறப்படுவதை அடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக ராமர் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கோவிலில் தினமும் ஏராளமான இந்துக்கள் வந்து வழிபாடு நடத்தி வந்தனர்.
  • தினமும் 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் வரை பக்தர்கள் வரை வருவார்கள். முக்கியமான காலங்களில் 15 ஆயிரம் பக்தர்கள் வரை வருவது உண்டு.
  • இந்நிலையில் அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு கூறப்படுவதை அடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வழிபாடு நடத்த வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அயோத்தி கோர்ட்டு தீர்ப்பு விவகாரம் வந்ததில் இருந்தே சமீப காலமாக பக்தர்கள் வருவது மிகவும் குறைவாக இருந்தது. (டிஎன்எஸ்)

Tuesday, September 28, 2010

online tamil news



வாழ்நாள் சாதனையாளர் விருது!
   67-வது வெனிஸ் திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை பெற்று வந்திருக்கிறார் மணிரத்னம். இயக்குநர் பாலுமகேந்திராவின் தலைமையில் சென்ற இயக்குநர் பட்டாளம் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து, ""அக்டோபர் 23-ல் நடக்கவிருக்கும் இயக்குநர் சங்கத்தின் 40-ம் ஆண்டு விழாவில் உங்களை கௌரவிக்க இருக்கிறோம்'' என்றது. ""நீங்க வந்து வாழ்த்தியதே போதும், பெரிய விழாவெல்லாம் வேண்டாம்'' என்றாராம் மணிரத்னம்.

online tamil news

"பாதுகாப்புப் படையினர் வசம் வந்தது'

காமன்வெல்த் போட்டி நடைபெறும் மைதானங்கள், விளையாட்டு கிராமம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் பாதுகாப்புப் படையினரின் முழுக் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தில்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ். தத்வால் தெரிவித்துளளார். 
காமன்வெல்த் போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் வசம் வந்துள்ளது.   17 ஆயிரத்து 500 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், 3 ஆயிரம் கமாண்டோக்கள், 15 வெடிகுண்டு செயல் இழப்பு குழுக்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
போட்டி நடைபெறும் மைதானங்கள், விளையாட்டு கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்திய விமானப்படை மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட 150 சிறப்பு ஆயுதத் தடுப்பு குழுவினர், தேசிய பாதுகாப்புப் படையினர் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீரர்கள் தங்கும் விளையாட்டு கிராமம் பகுதியில் சுமார் ஆயிரம் ஆயுதமேந்திய பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றார்.போட்டிகளுக்காக சாலைகள் முடக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தத்வால், "குறிப்பிட்ட சில சாலைகளில் மட்டுமே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை மட்டுமே இந்தத் தடை அமலில் இருக்கும். இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இப்போது நிலைமை மிகவும் சீரடைந்துள்ளது என்றார் அவர்

online tamil news

எட்டு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

தலைமைச் செயலாளர் எஸ். மாலதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவின்படி தமிழகத்தில் ஒரே நாளில் எட்டு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

online tamil news

காமன்வெல்த் போட்டிகள் சார்லஸ் தொடங்கி வைக்கிறார்
 
        2010 காமன்வெல்த் போட்டிகளை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தொடங்கி வைக்கிறார்.
காமன்வெல்தபோட்டியஇங்கிலாந்தராணி எலிசபெததொடங்கி வைப்பதபாரம்பரிவழக்கமாஉள்ளது. கடந்த 40 ஆண்டுகளாஅவர்தானகாமன்வெல்தபோட்டியதொடங்கி வைத்தவருகிறார்.
        ஆனாலடெல்லியிலநடக்குமகாமன்வெல்தபோட்டியதொடங்கி வைக்அவரவரவில்லை. உடல்நிலகாரணமாஅவரடெல்லிக்கவரவில்லஎன்றஅறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கபதிலஇளவரசரசார்லஸகாமன்வெல்தபோட்டி தொடக்விழாவிலபங்கேற்பாரஎன்றராணி எலிசபெதஅறிவித்தஉள்ளார்.
       ராணிக்கபதிலாஇளவரசரபோட்டியதொடங்கி வைப்பதசரிதானா? என்சர்ச்சஎழுந்தது. எனவஅவருக்கபதிலாஜனாதிபதி பிரதீபபட்டீலபோட்டியதொடங்கி வைப்பதகுறித்தஆலோசனநடந்தது.
        இதசம்பந்தமாஇந்தியா -இங்கிலாந்தஅரசஇடையபேச்சுவார்த்தநடந்தது.

online tamil news

அயோத்தி வழக்கில் செப். 30-ல் தீர்ப்பு

        அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் வரும் 30-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறவுள்ளது.
          இத்தகவலை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பணி அதிகாரி ஹரி சங்கர் துபே தெரிவித்தார்.
         அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளிவைக்கக் கோரி கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மேற்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
         நீதிபதிகள் எஸ்.யூ. கான், சுதிர் அகர்வால், டி.வி. சர்மா ஆகியோர் அடங்கிய குழு, செப்டம்பர் 30-ம் தேதி மாலை 3.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் சிறப்பு பணி அதிகாரி கூறினார்.

Sunday, September 26, 2010

online tamil news

 தொலைதூரக் கல்வியில் ஐந்தாண்டு எம்.பி.ஏ., பட்டப்படிப்பு அறிமுகம்

                "" வரும் கல்வியாண்டு முதல் தொலைதூரக் கல்வியில் ஐந்தாண்டு எம்.பி.ஏ., பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படும், '' என சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்தார்.  
          சென்னை பல்கலை தொலைதூரக் கல்வியில் சேரும் மாணவர்களின் சேர்க்கையை எளிமைப்படுத்தும் வகையில், கடந்த ஜூன் மாதம் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மையம் துவக்கப்பட்டது. இந்த மையம் மூலம், நாள் ஒன்றுக்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வியில் சேருகின்றனர்.
            தொலைதூர கல்வியில் எம்.பி.ஏ., பட்டப்படிப்பில், "மார்க்கெட்டிங், பைனான்ஸ், இன்சூரன்ஸ்' உட்பட 12 பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, 60 சதவீத மாணவர்கள் எம்.பி.ஏ., பட்டப்படிப்பையே தேர்வு செய்கின்றனர். தொலைதூரக் கல்வி பயிலும் சென்னை பல்கலை பட்டதாரிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு 20 சதவீத கட்டண விலக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு முழு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
                 வரும் கல்வியாண்டு முதல் ஐந்தாண்டு ஒங்கிணைந்த எம்.பி.ஏ., பட்டப்படிப்பு மற்றும் இரண்டு ஆண்டு, "எக்சிகியூட்டிவ்' எம்.பி.ஏ., ஆகிய பட்டப்படிப்புகள் துவக்கப்பட உள்ளன. இந்த பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகளை தமிழிலும் எழுதலாம். இவ்வாறு திருவாசகம் கூறினார்.

Saturday, September 25, 2010

online tamil news

வவ்வால்களின் புகலிடமாக மாறிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம்
 
          காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தின் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், வவ்வால்களின் புகலிடமாக மாறியுள்ளது.
            காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உலகப்புகழ் பெற்றது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் ஆயிரங்கால் மண்டபம் அழகுற அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் தற்போது 616 தூண்கள் மட்டுமே உள்ளன. மண்டபத்தின் முன்புறம் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோபுரம் உள்ளது. இக்கோபுரம் பல்லவர் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. 
             ஆயிரங்கால் மண்டபத்தில் விகட சக்கர விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். ஆயிரங்கால் மண்டபத்தையொட்டி திருக்குளம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் அன்று, ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் ஏகாம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
           பல்வேறு சிறப்புகளைப் பெற்ற ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்பகுதியில் தளம் பெயர்ந்துள்ளது. மண்டபத்தை பராமரிக்க முடியாததால் கோவில் நிர்வாகம், மண்டபத்தை பூட்டி வைத்தது. பக்தர்கள் செல்லாததால் மண்டபம் பாழடையத் துவங்கியது. தற்போது மண்டபம் வவ்வால்களின் புகலிடமாக மாறியுள்ளது. ஆயிரங்கால் மண்டபம் உள்ளே ஆயிரக்கணக்கான வவ்வால்கள் உள்ளன. இதனால், மண்டபம் உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
           நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆயிரங்கால் மண்டபத்தைப் புதுப்பிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், 40 லட்ச ரூபாய் மதிப்பிற்கு மதிப்பீடு தயார் செய்தனர். ஆனால், நிதி ஒதுக்கப்படவில்லை. இன்று கூடுதல் நிதி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


online tamil news

அதிகம் பேருக்கு இந்தியாவில் இதயம் பாதிக்க வாய்ப்பு உண்டு
 
             "20 வயது முதல் 40 வரை உள்ளோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இருதய நோய் வராமல் காக்க உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவசியம்,'' என, அப்போலோ மருத்துவமனை டாக்டர் செங்கோட்டுவேலு தெரிவித்தார்
                 உலகமெங்கும் சர்வதேச இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை அப்போலோ மருத்துவமனை முதுநிலை இண்டர்வென்ஷனல் இதய நோய் டாக்டர் செங்கோட்டுவேலு கூறியதாவது: 
               இந்தியாவில் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. புகைபிடித்தல், சர்க்கரை சத்து பற்றி விழிப்புணர்வு இல்லாததால், இதயம் பாதிக்கிறது; உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது. ஒரு நாளில் பாதி நேரம் அலுவலக பணியில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படுகிறது. பணியுடன், உடலையும் பேணுதல் அவசியம். மன உளைச்சல், வேதனை, கவலை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்தல், போட்டி, பொறாமை போன்ற பல்வேறு பிரச்னை, சோதனைகளை சந்திக்க நேரிடும் போது இதயம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
             இருதய நோய் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இங்கு இல்லை. எனவே, அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர் இதயம் பாதித்தவர்கள் இந்தியாவில் இருப்பர்.

online tamil news

இதய நோய் பாதுகாப்பு திட்டத்தில் 8ம் வகுப்பு படித்த பெண்களுக்கு வேலை
              கிராமங்களில் எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு, இதய நோய் பாதுகாப்பு திட்டத்தில் கணக்கெடுக்கும் வேலை வழங்கப்பட உள்ளது.
              விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2007ல் உலக வங்கி நிதி உதவியுடன், இதய நோய் பாதுகாப்பு முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பொதுமக்களுக்கு உயரம், எடை சரிபார்த்தல், ரத்த அழுத்தம் சோதனையில் இதய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
          இவர்களுக்கு தொடர் சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. கிராமங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 35 சதவீத மக்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தது. இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் "இதய நோய் பாதுகாப்பு திட்டம்' என செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
           இதை செயல்படுத்த முதல் கட்டமாக அனைத்து கிராமங்களிலும் எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கணக்கெடுப்பாளர்களை கிராமம் வாரியாக தேர்வு செய்து அவர்களுக்கு பொது சுகாதார துறை மூலம் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்கு பின் 100 முதல் 200 வீடுகள் வரை கணக்கெடுக்க, ஊக்க தொகை வழங்கப்பட உள்ளது. 
         ஆய்வில் நோயாளிகள் கண்டறியப்பட்டால், அவர்கள் அருகில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

Thursday, September 23, 2010

online tamil news

மாயமான சாலை: கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசுபஞ்சாயத்து தலைவர் அறிவிப்பு

            வி.கே.புரம் அருகே தார்சாலையை காணவி்ல்லை என்று பஞ்சாயத்து தலைவர் புகார்  கூறியுள்ளார். மேலும் அதைக் கண்டுபிடித்துத் தருவோருக்கு பரிசும் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

            அம்பை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அடையகருங்குளம் பஞ்சாயத்தில் கடந்த 2008-ம் ஆண்டு சிறுசேமிப்பு ஊக்க நிதியி்ல் இருந்து ரூ.5 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது என அம்பை ஊராட்சி ஒன்றித்தில் இருந்து வருட வாரிய திட்டப்பணிகள் குறித்த பொது விவர தகவல் ஏட்டில் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்கள்.
            இதன் அடிப்படையில் 583 ஹெக்டேர் பரப்பளவு உள்ள பஞ்சாயத்தில் தேடிப் பார்த்தபோது தார்சாலை பணி நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆகவே ரூ.5 லட்சம் மதிப்பில் அடையகருங்குளம் ஊராட்சியில் போடப்பட்டுள்ள தார்சாலையை என்னாலும், எனது ஊராட்சி பணியாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை உள்ளது.
          ஆகவே பொதுமக்கள் நலன் கருதி அந்த தார்சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கண்டுபிடித்து தரக் கோரி விகேபுரம் காவல்துறையின் உதவியை நாட உள்ளோம். இச்சாலையை கண்டுபிடித்து தந்தால் பஞ்சாயத்து சார்பாக தக்க சன்மானம் தரப்படும் என்று கூறியுள்ளார்.

online tamil news

மாரடைப்பைக் பல மாதங்களுக்கு முன்பே கண்டறிய உதவும் முடி

              நமது தலை முடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு வருமா என்பதை கண்டறிய முடியும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
            தலைமுடியில் ஹார்மோன் கார்டிசால் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிகை செய்தி .
           வேலை, குடும்பம் மற்றும் பணப் பிரச்சனைகளால் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், மாரடைப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.
           இந்த நிலையில்தான் தலைமுடியில் உள்ள கார்டிசாலின் அடர்த்தியை வைத்து இதை கணிக்க முடியும் என ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. வழக்கமாக ரத்த நிணநீர், சிறுநீர் மற்றும் உமிழ்நீரில் தான் கார்டிசாலின் அளவு கண்டறியப்பட்டது. இவற்றில் சில மணி நேரத்தில் இருந்து சில நாட்கள் வரை உள்ள கார்டிசாலைத் தான் அளக்க முடியும். இதனால் நீண்ட காலமாக உள்ள அழுத்தத்தைக் கண்டறிய முடியாது.
           தலைமுடியில் உள்ள கார்டிசாலை வைத்து பல மாதங்களுக்கு முன்பே மாரடைப்பை கணிக்க முடியும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
          

online tamil news


துவக்க விழாவில் பாடுகிறார் ரஹ்மான்

          "ஜெய் ஹோ', "மாதுஜே சலாம்', "வந்தே மாதரம்'  மற்றும் வைஷ்ணவ ஜனதோ ஆகிய பாடல்களை காமன்வெல்த் தொடக்க விழா நிகழச்சியில் ஏ.ஆர், ரஹ்மான் பாடவுள்ளார். 
          காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 60 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
         இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கான மைய நோக்கு பாடல்கள் பெரிய திரையில் பிரமாண்டமான முறையில் திரையிடப்படும்.   மேலும் தில்சே படத்தில் அவர் இசையமைத்த சையா, சையா பாடலுக்கு 1500 கலைஞர்கள் ஆடுகின்றனர். 
             ஏற்கெனவே ரஹ்மான் பாடி பெரிய வெற்றியடைந்த வந்தே மாதரம், மாதுஜே சலாம், ஆகிய பாடல்களை அவரது சொந்த குரலில் ஏ. ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் பாடுவார். ஆஸ்கார் விருதைப் பெற்றுக் கொடுத்த ஜெய் ஹோ பாடலையும் மேடையில் பாடவுள்ளார் ரஹ்மான். மகாத்மா காந்தியின் நினைவாக அவருக்கு மிகவும் விருப்பமான வைஷ்ணவ ஜன தோ பாடலும் மேடையில் பாடப்படும். அந்தப் பாடலையும் ஏ.ஆர். ரஹ்மான் பாடுகிறார். துவக்க விழா நிகழ்ச்சிகளில் பிரபல பாடகர் ஹரிகரனும் பாடவுள்ளார்.  
            அதைத் தொடர்ந்து சுமார் 900 டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியும் இடம்பெறும். இது குறித்து போட்டி ஏற்பாடுகளுக்கான கலைக்குழு தலைவர் பாலா கூறுகையில், "கடந்த 14 மாதங்களாக நாங்கள் பணி செய்து வருகிறோம். துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் இந்தியாவின் தனித்தன்மையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைப்பதாக அமையும். இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக மட்டும் 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.

online tamil news

அயோத்தி தீர்ப்பை செப்.28 வரை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
                  அயோத்தி ராமஜன்மபூமி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் நாளை வழங்கவிருந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.              
                   முன்னதாக அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம்  முடிவு செய்திருந்தது.
                 பின்னர் பிற்பகல் 2 மணியளவில் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. அப்போது அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் பெஞ்ச், எப்போது தீர்ப்பு வழங்குவது என்பது குறித்து செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் அடுத்தகட்ட விசாரணையின்போது முடிவு செய்யப்படும் என அறிவித்தது.
              எனவே நாளை வழங்கவிருந்த அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு, அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

Wednesday, September 22, 2010

online tamil news


நேரு ஸ்டேடிய அலங்கார கூரை ஓடுகள் சரிந்தன

              காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு மேலும் ஒரு பின்னடைவாக புதன்கிழமை ஒரு விபத்து ஏற்பட்டது. தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் அலங்கார கூரைகளில் இருந்து ஓடுகள் சரிந்து விழுந்தன.
         தில்லியில் அக்டோபர் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.           
         போட்டிக்காக ஸ்டேடியங்களைத் தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா நடைபெறும் தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் அலங்கார கூரை அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.அப்போது அலங்கார கூரையில் பதிக்கப்பட்டிருந்த அலங்கார ஓடுகள் (டைல்ஸ்) சரிந்து விழுந்தன. 2 அடி நீளம், 2 அடி அகலமுள்ள 3 ஓடுகள் மேலிருந்து கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.
             கடந்த 3 நாள்களில், இந்த ஸ்டேடியத்தில் நடைபெறும் 3-வது சம்பவமாகும் இது. ஸ்டேடிய நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை கடந்த திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.ஸ்டேடியத்தையும், வாகன நிறுத்துமிட பகுதியையும் இணைக்க கட்டப்பட்டு வந்த நடைபாலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடிந்து விழுந்தது. இதில் 27 பேர் காயமடைந்தனர்.முன்னதாக, தில்லி ஜும்மா மசூதி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதும், இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதும் போட்டியில் பங்கேற்கும் வீரர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
             வீரர் விலகல்: இந்நிலையில், போட்டியில் சாதிப்பதைவிட உயிரே முக்கியம் எனக் கூறி இங்கிலாந்தைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீரர் பிலிப் இடாவ் விலகிவிட்டார்.ஏற்கெனவே போட்டி ஏற்பாடுகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாக போட்டி அமைப்புக் குழு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
            போட்டி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த சர்வதேச காமன்வெல்த் போட்டி சம்மேளனமும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் போட்டி ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்திருப்பதுடன் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து தினசரி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது அரசுக்கும், போட்டி அமைப்புக் குழுவுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. 

Tuesday, September 21, 2010

online tamil news

 முகவரி அடையாள அட்டை' : தபால் துறையில் அறிமுகம்

               "முகவரி அடையாள அட்டை' திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட், புதிய காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் போன்றவற்றிற்கு முகவரிக்கான அத்தாட்சி கேட்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
             இதுபோன்ற தேவைகளுக்கு பயன்படுத்த "முகவரி அடையாள அட்டை'திட்டத்தை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. மாவட்ட தபால் நிலையத்தில் இதற்கான விண்ணப்பம் ரூ.10க்கு தரப்படுகிறது. 
              பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ. 240 கட்டணம் செலுத்த வேண்டும். முகவரி குறித்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். பின் மத்திய அரசு, தபால்துறை முத்திரையுடன் லேமினேசன் செய்யப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லும். 

online tamil news

 சைபர் குற்றங்கள் பாதிப்பில் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்

               உலகளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
             சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை, "குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம் அண்மையில் நடத்தியது.அதன் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளவில், கம்ப்யூட்டர்கள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக செய்யப்படும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
            இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன.
உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது.
         வெளிநாடுகளில் இருந்து இந்த குற்றங்களை செய்வதால், சைபர் குற்றவாளிகளை போலீசாரால் நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர முடியவில்லை என்று, பெரும்பாலான இந்தியர்கள் நம்புகின்றனர்.சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் 59 சதவீத இந்தியர்கள், பாதிப்புக்கு பின்னர், இணையதள பயன்பாட்டில், தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றனர். தங்கள் பாதிப்புக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஆனால், 37 சதவீதம் பேர் மட்டுமே போலீசில் புகார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

online tamil news

போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க வேண்டும் 
 
           போலி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போர் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உணவுப் பொருள் வழங்கல் அலுவலர்களிடம் 2 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
         ஏழை, எளியவர்கள் உள்பட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் பொதுவிநியோகத் திட்டம் மூலம் தட்டுப்பாடின்றி கிடைக்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 
          போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கவும் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் போலி ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
        போலி ரேஷன் அட்டைகள் வைத்திருப்போர், அவற்றை உடனடியாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறினால், அவர்கள் மீது அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

online tamil news

தில்லி நேரு ஸ்டேடிய நடைபாலம் சரிந்தது


        காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ள முக்கிய அரங்கங்களில் ஒன்றான ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்திலுள்ள நடைபாலம் சரிந்து 27 பேர் காயமடைந்தனர்.
            ஸ்டேடியத்துக்கு வெளியே 95 மீட்டர் நீளமுள்ள இந்த நடைபாலம், மேம்பாலத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்தது.  | 10.5 கோடி செலவில் சண்டீகரைச் சேர்ந்த பிஎன்ஆர் இன்பிரா நிறுவனம் இந்தப் பணியை நடத்தி வந்தது.சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு தில்லி பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
             இந்த நடைபாலம் கட்டுமான பணி முடிந்த பின்னர் போட்டியை பார்க்க வருவோருக்காக திறக்கப்பட இருந்தது. வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த நடைபாலம் வழியாக ரசிகர்கள் ஸ்டேடியத்துக்கு வருவதற்கு எளிதாக இருப்பதற்காக பாலம் கட்டப்பட்டது. ஆனால் அதற்குள் பாலம் இடிந்து விழுந்துவிட்டது. 
            அக்டோபர் 3-ம் தேதிக்குள் பாலம் மீண்டும் கட்டப்பட்டுவிடும் என்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இந்த ஸ்டேடியத்தில் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.நேரு ஸ்டேடியத்தின் முன்பகுதியில் மேல்கூரை அமைத்தபோது திங்கள்கிழமை சரிந்து விழுந்தது. இதில் 2 போலீஸôர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

online tamil news


            மட்டு.. வாகரை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் 7 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் சிவிலியன்கள் இருவரும் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
             திம்புலாகலவிலள்ள சிறிபுர எனும் இடத்திலுள்ள தேவாலயமொன்றில் இவர்கள் புதையல் தோண்டியதாக பொலிஸார் கூறுகின்றனர். இது தொடர்பாக கிராமவாசிகளிடமிருந்து கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து பொலன்னறுவை மன்னம்பிட்டி பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  

online tamil news

உலகின் சக்திவாய்ந்த 3வது நாடாக இந்தியா உருவாகும்: அமெரிக்கா கணிப்பு
  •  2025-ல் உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளில் இந்தியா 3-வது இடம் வகிக்கும் என்று அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.
  • இந்த கணிப்பில், முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் சீனாவும் இடம்பெற்றுள்ளன.
  • அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்சில் (என்ஐசி) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் கூட்டாக வெளியிட்டுள்ள "உலக ஆளுகை 2025" என்ற அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இந்த அறிக்கையின்படி, 2025-ல் கூட்டமைப்பு அடிப்படையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாமிடத்திலும், ஐரோப்பிய ஒன்றியம் மூன்றாமிடத்திலும், இந்தியா நான்காம் இடத்திலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

online tamil news

பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி

          பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் சித்த மருந்துகளுக்கு உண்டு என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். 
         இப்போது பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அலோபதி முறையில் மூக்கில் தடுப்பு மருந்து ஸ்பிரே செய்தல் அல்லது தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பு மருந்துக்கு சென்னை மாநகராட்சி சோதனைக்கூடங்களில் ரூ.100-ம், தடுப்பூசிக்கு ரூ.200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
           சித்த மருந்துகள் என்ன? கபத்துக்கு உரிய நோய்க்குறிகளையே பன்றிக் காய்ச்சலும் கொண்டுள்ளதால், நிலவேம்புக் குடிநீரை உள்ளடக்கிய "கபசுரக் குடிநீர்' (தூள்), உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கக்கூடிய "பிரம்மானந்த பைரவம்' மாத்திரை, "அமுக்கரா' மாத்திரை ஆகியவற்றை சாப்பிட்டால் போதுமானது. 
               அதாவது, "கபசுரக் குடிநீரை' (தூள்) நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் 40 மில்லி சாப்பிட வேண்டும்; அத்துடன் பிரம்மானந்த பைரவம் ஒரு மாத்திரை, அமுக்கரா 2 மாத்திரை ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இவ்வாறு தொடர்ந்து 3 நாள்கள் சாப்பிட்டாலே பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு உரிய ஆற்றல் உடலுக்குக் கிடைத்து விடும்.

Monday, September 20, 2010

online tamil news

பன்றிக் காய்ச்சல்: ஆஸ்துமா இருந்தால் மூக்கில் தடுப்பு மருந்து வேண்டாம் 
 
          ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்காக மூக்கில் போடப்படும் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளக் கூடாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 
          "சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையம், சென்னை மாநகராட்சி சார்பில் நகரில் 5 பகுப்பாய்க் கூடங்களில் கட்டண அடிப்படையில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து (மூக்கின் இரண்டு துவாரங்களிலும் ஸ்பிரே செய்தல்) அல்லது தடுப்பு ஊசி போடப்படுகிறது. கிண்டி கிங் ஆய்வு மையத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 3,395 பேருக்கு தடுப்பு மருந்து அல்லது தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
         காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு மூக்கில் தடுப்பு மருந்து விடுதல் அல்லது தடுப்பூசி போடப்படுகிறது. 3 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கும் மூக்கில் தடுப்பு மருந்து விடக் கூடாது என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
          மேலே குறிப்பிட்ட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ள நிலையில் குடும்ப மருத்துவரின் ஆலோசனையுடன் தடுப்பு மருந்து அல்லது தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.

online tamil news

போலீசார் எழுத்து தேர்வு

  • ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் மூலம் இரண்டாம் நிலை போலீசார் தேர்வு எழுதிய 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • இயக்குனர் ராமமூர்த்தி தலைமையில் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இரண்டாம் நிலை போலீசார் தேர்வுக்கு இந்த மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 8-ல் எழுத்துதேர்வு நடந்தது. 
  • இந்த மையத்தில் பயின்ற 250 பேர் எழுத்து தேர்வு எழுதினர். ஆயக்குடியை சேர்ந்த வடிவேல்(26), ராஜலிங்கம்(27), பாலாஜி(22), பழனிச்சாமி(27) உட்பட 35 பேரும், தேனி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூரை சேர்ந்த 200 பேர், மொத்தம் 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Saturday, September 18, 2010

online tamil news

காவலர் பணி: அக்டோபர் 4 முதல் உடல் தகுதித் தேர்வு
           தமிழக காவல் துறையில் 10,117 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி முதல் உடல் தகுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
          தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர்கள் என மொத்தம் 10,117 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
         இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 8-ம் தேதி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்தகட்டமாக உடல் தகுதி திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். அந்தத் தேர்வில் பங்கேற்க தகுதிப் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
          இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் திறன் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி முதல், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், தருமபுரி, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 14 மையங்களில் நடைபெற உள்ளன.
 இணையதள முகவரி:www.tn.gov.intnusrb​

online tamil news




ஏழைகளுக்கு இலசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி
  •  பன்றிக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசி ஏழைகளுக்கு இலசமாக போடப்படும் என்று முதல்வர் கருணாநிதி றிவித்துள்ளார்.
  • ஆண்டு வருமானம் ரூ.24,000-க்குக் கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • பன்றிக் காய்ச்சல் தீவிரம்:சென்னை, கோவை, வேலூர், கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலின் தீவிரம் அதிகளவு உள்ளது. அந்தப் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.

Friday, September 17, 2010

online tamil news

வி.ஏ.ஓ., தேர்வுக்கு தினமலரின் இலவச வழிகாட்டி பயிற்சி
               தினமலர் சார்பில் மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (செப்.,18) நடக்கிறது.
               தமிழக அரசில் காலியாக உள்ள 2500 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ. ஓ.,) பணியிடங்களை விø ரவில் டி.என். பி.எஸ்.சி., நிரப்ப உள்ளது. தமிழகம் முழுவதும் 12 லட்சத்திற் கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு விரைவில் நடக்க உள்ளது.
            இதற்கு வாசகர்களை தயார் செய்யும் பொருட்டு வழிகாட்டி முகாமை, தினமலர் நடத்துகிறது. நாளை காலை 10.30 முதல் மதியம் 12.30 மணி வரை பெண்களுக்கும், மாலை 4 முதல் 6 மணி வரை ஆண்களுக்கும் நடக்கிறது. மதுரை மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ் துவக்கி வைக்கிறார்.
           மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் பொது அறிவு, ஆசிரியர் ராஜ்மோகன் தமிழ்ப் பாடம் குறித்து கருத்துரை வழங்குகின்றனர்.  வி.ஏ.ஓ., தேர்வெழுத காத்திருக்கும் அனைவரும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். அனுமதி இலவசம்.

Thursday, September 16, 2010

online tamil news

சென்னையில் பிறந்து, தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

     சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து, தமிழ்ப்பெயர் சூட்டப்பட்ட 1000 குழந்தைகளுக்கு முதல்வர் கருணாநிதி விரைவில் தங்க மோதிரம் வழங்க உள்ளதாக மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
         சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களுக்கு உணவு அளிக்கும் சிறப்பு திட்டத்தினை தொடங்கிவைத்து : 
           தனியார் மருத்துவமனையைக் காட்டிலும் மாநகராட்சி மருத்துவமனை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.  இன்று சிறப்பு திட்டமாக மாநகராட்சி மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 4 வேளை உணவு அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சாதாரண முறையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 3 நாட்களுக்கும், ஆபரேஷன் முறையில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 5 நாட்களுக்கும் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
              மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து தமிழ்ப்பெயர் சூட்டப் பெற்ற 750 குழந்தைகளுக்கு 3.6.2009 முதல் தங்கமோதிரம் ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வழங்கப்பட்டுள்ளது. 

online tamil news

சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை


  • சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
  • சத்துணவில் 5 நாள்களுக்கு முட்டை: மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 3-6-1989 முதல் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது. 
  •  2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் வாரம் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன. 
  •  15-7-2007 முதல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக பள்ளிக் கூடம் நடைபெறும் 5 நாள்களிலும் இனி முட்டை வழங்கப்படும். 

online tamil news

அரசு வேலைவாய்ப்பு கேட்டு ஜாட் இனத்தவர் போராட்டம்

அரியானாவில் "ஜாட்' சமூகத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு கேட்டு நடைபெறும் போராட்டம் தொடரும் என, அகில இந்திய ஜாட் மகாசபை தலைவர் யஷ்பால் மாலிக் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு தொடர்பாக ஜாட் சமூகத்தவர் நடத்தி வந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பை ஜாட் மகாசபை தலைவர் யஷ்பால் மாலிக் மறுத்துள்ளார். 
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், "அரசு வேலை வாய்ப்பில் குறிப்பிட்ட சதவீத இடஒதுக்கீடு கேட்டு நாங்கள் நடத்தும் போராட்டம் தொடரும். இந்த போராட்டம் ஜனநாயக முறையில் அமைதியாக நடைபெறும். ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்கள் போக்குவரத்தை தடை செய்ததாக கூறப்படுகிறது.

online tamil news

மதிப்பெண் பட்டியலில் தாயின் பெயர்

                   பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் மதிப்பெண் பட்டியலில் இனி தாயின் பெயரையும் சேர்க்க வேண்டும் என, ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
                    இதுவரை 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் தந்தை பெயர் மட்டும் வெளியிடப்பட்டு வந்தது. தந்தை பெயருடன், தாயின் பெயரையும் சேர்க்க வேண்டும் என, ஆந்திர மாநில கல்வித் துறைக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மனுக்கள் வந்தன.
பின்னர் 2010-11 கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் தந்தை பெயருடன், தாயின் பெயரையும் சேர்த்து பிரசுரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
                  மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, தாயின் பெயர் மட்டுமே இருந்தால் போதும் என கோரினாலும், தந்தை பெயர் மட்டும் போதும் என தெரிவித்தாலும் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும். தாய், தந்தை இருவரின் பெயரையும் சேர்க்க வேண்டுமென மாணவர்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்தால், அதன் படி இருவரின் பெயரும் சேர்க்கப்படும். மாணவர்களின் சுயமுடிவின் படி மதிப்பெண் பட்டியலில் தந்தை, தாயாரின் பெயர் சேர்க்கப்படும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Tuesday, September 14, 2010

online tamil news

கலைச் செம்மல் விருது அறிவிப்பு

             மரபு வழி மற்றும் நவீன பாணி கலைப் பிரிவுகளை சேர்ந்த புகழ்பெற்ற வல்லுனர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
         ஓவியம், சிற்பம், பதிப்போவியம் ஆகிய கலைகளை வளர்க்கவும், பாதுகாக்கவும், பரப்பவும் இக்கலைகளில் ஈடுபட்டுள்ள படைப்பாளர்களை ஊக்குவிக்க, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு ஆரம்பிக்கப்பட்டது. 
          ஒவ்வொரு ஆண்டும் மரபு வழி கலைஞர் ஒருவருக்கும், நவீன பாணிப் பிரிவு கலைஞர் ஒருவருக்கும் கலைச் செம்மல் விருது வழங்கப்படுகிறது. இதன்படி, 2008-09 மற்றும் 2009-10ம் ஆண்டுகளுக்கான கலைச் செம்மல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களை முதல்வர் கருணாநிதி ஏற்றுக் கொண்டு, கலைஞர்களை தேர்வு செய்துள்ளார். 
            இதில், 2008-09ம் ஆண்டுக்கான கலைச் செம்மல் விருது, நவீன பாணி ஓவியங்கள் குறித்து இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் பல கண்காட்சிகள் நடத்திய சி.தட்சிணாமூர்த்திக்கும், மரபு வழி பிரிவில் கட்டட கலைத் துறையின் திறன் பெற்று, இந்தியா மற்றும் அயல்நாடுகளில் கோவில் பணிகளை மேற்கொண்ட கே.தட்சிணாமூர்த்திக்கும் வழங்கப்படுகிறது.
             
கடந்த 2009-10ம் ஆண்டுக்கான கலைச் செம்மல் விருது, நவீன பாணி ஓவியங்கள் குறித்து, இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் பல கண்காட்சிகள் நடத்திய ஆர்.பி.பாஸ்கரனுக்கும், மரபு வழி பிரிவில் கட்டட கலைத் துறையில் திறன் பெற்று, பல கோவில் பணிகளை மேற்கொண்ட டி.பாஸ்கரனுக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார்.

online tamil news

இறுதி வாக்காளர் பட்டியல் : இன்று வெளியீடு

  • தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் தங்களை சேர்த்துக் கொள்ள 31 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 
  •  விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு தகுதியுடைய 27 லட்சம் விண்ணப்பத்தாரர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர். 4 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

online tamil news

 பளுதூக்கு வீராங்கனை சானுவுக்கு வாழ்நாள் தடை

                   ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சனமாச்சா சானுவுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட உள்ளது.
                   இந்தியாவின் அனுபவ பளுதூக்குதல் வீராங்கனை சனமாச்சா சானு(31). முன்னாள் ஆசிய சாம்பியனான இவர், 2002ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார். பின் 2004ல் ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். இதையடுத்து இரண்டு ஆண்டுகள் தடையை சந்தித்தார்.
                 பின் டில்லி, காமன்வெல்த் போட்டிக்கான குழுவில் இடம் பெற்றார். 53 கி.கி., தகுதிச் சுற்றில் மூன்றாவது இடம் பெற்ற இவர், வாய்ப்பை இழந்தார். தகுதிச்சுற்றின் போது இவரிடம், தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மையம்("நாடா') சார்பில் சோதனை நடத்தப்பட்டது. இவரது சிறுநீர் "ஏ' மாதிரியில் தடை செய்யப்பட்ட "மெத்தில்எக்சானியமைன்' இருந்தது கண்டறியப்பட்டது. நேற்று "பி' மாதிரியின் சோதனை முடிவு வெளியானது. இதிலும் தடை செய்யப்பட்ட மருந்து பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
             ஏற்கனவே 2004ல் ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய சானு, தற்போது இரண்டாவது முறையாக சிக்கியுள்ளதால், வாழ்நாள் தடையில் இருந்து தப்புவது மிகவும் கடினம்.

online tamil news

ஆசிய யோகா: திருப்பூர் வீரருக்குத் தங்கம்

          ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில், திருப்பூரைச் சேர்ந்த வீரர் ஜாவித் தங்கம் வென்றார். மற்றொரு வீரர் முத்துசுப்பிரமணியம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
          ஆசிய நாடுகளுக்கு இடையேயான யோகா போட்டிகள் செப்டம்பர் 4 முதல் 8-ம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்றன. இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.                      
           இதில், 19 முதல் 25 வயதுக்கு உள்பட்டோருக்கான அர்ட்ஸ்டிக் பேர் பிரிவில் ஜாவித் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும், அர்ட்ஸ்டிக் மற்றும் ஒலிம்பிக் யோகா பிரிவுகளில் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். வெள்ளிப் பதக்கம்:   12 முதல் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான அர்ட்ஸ்டிக் பேர் பிரிவில் திருப்பூர் வீரர் முத்துசுப்பிரமணியம் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 
          இப் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் முத்துசுப்பிரமணியம் மற்றும் ஜாவித் இருவரும், அக்டோபர் மாதம் ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற உள்ள யோகா போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆசியப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த திருப்பூர் வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.

online tamil news

பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து
 
        பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களால் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
        அமெரிக்க மருத்துவ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகுறிபில் தெரிவித்திருப்பதாவது: அனைத்து குளிர் பானங்களிலும் காபின் எனப்படும் சுவை கூட்டும் பொருளை சேர்ப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. காபின் கலந்த குளிர்பானம் ஒன்றை தொடர்ந்து இரண்டு தடைவ அருந்தினால் அவை ஐந்து காபி குடித்ததற்கு சமம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். 
       இந்த சோதனைக்காக 19 வயதுக்குட் பட்ட வர்களைஆராய்ந்த போது குளிர்பானம் குடிப்பதற்கு முன்னர் இருதயதுடிப்பு அரைமணி நேரத்தில் 82 ஆக இருந்தது. அதேசமயம் குளிர்பானம் குடித்தபின்னர் 106 ஆக அதிகரித்து காணப்பட்டது.தினமும் இரண்டு பாட்டில் குளிர்பானம் குடித்து வரும் குழந்தைகளின் எடை 30 கிலோ வரை குறையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் டாக்டர்கள்.

online tamil news

இணையதளத்தில் மெய்நிகர் சுற்றுலா

           தமிழகத்தில் உள்ள 48 சுற்றுலா தலங்களை இணையதளம் மூலம் கண்டு ரசிக்க, மெய்நிகர் சுற்றுலா (வெர்ச்சுவல் டூர்) துவக்கப்பட்டுள்ளது. 
           தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், தமிழகத்தில் சுற்றுலா பயணம் மற்றும் தங்கும் விடுதிகளின் முன்பதிவை இணையதளம் மூலம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே செய்துள்ளது. இந்நிலையில், தற்போது மெய்நிகர் சுற்றுலாவை தனது இணையதளத்தின் மூலம் துவக்கி உள்ளது. 
          தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களின் இயற்கை பண்டைய கால கலாசாரம், கட்டடக் கலை போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில், 48 சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. மலைவாசத் தலங்கள், கோவில் மற்றும் கட்டடக் கலையை வெளிப்படுத்தும் தலங்கள், நீர் வீழ்ச்சிகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள், அதிகம் பிரபலமாகாத சுற்றுலா தலங்கள், சுற்றுச்சூழல் சுற்றுலா போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன. 
         மேலும் 25 புதிய சுற்றுலா தலங்களை இதில் அறிமுகம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, September 13, 2010

online tamil news

நூலகர் தேர்வு பட்டியல் இன்று வெளியிட முடிவு

         நூலகர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியல் இன்று வெளியிடப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. 

        அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்ற நூலகர்கள் மற்றும் உதவியாளர்கள் என 99 பேரை தேர்வு செய்வதற்கான போட்டி தேர்வு, கடந்த மாத இறுதியில் நடந்தது. இதன் முடிவுகள் வெளியிடப்பட்டு, கடந்த 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தன. 

         இதை தொடர்ந்து, நேற்று நேர்முகத் தேர்வு நடந்தது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல், நேற்று மாலைக்குள் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், மாலை 5 மணி வரை முடிவுகள் வெளியாகவில்லை. இன்று காலை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

online tamil news

 தூர்தர்ஷன் தேர்வில் முறைகேடு 25 பேர் நியமனம் ரத்தானது
      தூர்தர்ஷனில் நிருபர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, 25 பேரின் நியமனத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. 
         பிரசார் பாரதி, சமீபத்தில், தூர்தர்ஷனுக்காக நிருபர்களையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தேர்வு செய்வதற்காக, மூன்று கட்ட தேர்வை நடத்தியது. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குரல் தேர்வு போன்றவை நடத்தப்பட்டன. முதலில், 25 பேரை தேர்வு செய்ய திட்டமிட்ட பிரசார் பாரதி, கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கையை, 35 ஆக உயர்த்தியது. இத்தேர்வை எழுதிய பத்திரிகையாளர் ஒருவர், தேர்வு முறையில் நிறைய மோசடிகள் நடந்துள்ளதாக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் புகார் கூறினார்.
       "எழுத்துத் தேர்வு எழுதிய பலருக்கு மதிப்பெண்கள் மிக குறைவாக போடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வில் சிலருக்கு கூடுதல் மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளாத பலரும், இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். "குறிப்பாக, எம்.பி.,யின் மகள் ஒருவரும், மத்திய அமைச்சர் கிருஷ்ணா திராத்தின் மகள் யாஷ்வியும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளாத இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், அரசியல் நோக்கோடு இந்த தேர்வு நடைபெற்றுள்ளது என்பது தெரிகிறது. "அது மட்டுமல்லாது அனிதா கல்ரா கலா என்பவர், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவேயில்லை. அவர் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என, தெரியவில்லை' என, புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
       இம்மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாய தலைவர் வி.கே.பாலி விசாரித்தார். பிரசார் பாரதி தேர்வு செய்ததில் நிறைய முறைகேடுகள் இருப்பதால், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 25 பேரின் நியமனத்தை ரத்து செய்வதாக தெரிவித்தார்.

online tamil news

பிளஸ் 2 தனித் தேர்வு மாணவர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ - 14-09-2010
        பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு, செப். 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை, ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
         தேர்வுத்துறை அறிவிப்பு: மாணவர்களுக்கு, அருகில் உள்ள தேர்வு மையங்களில் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘ஹால் டிக்கெட்’ பெற்றதும், அதில் இடம் பெற்றுள்ள பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், தேர்வெழுத பதிவு செய்யப்பட்டுள்ள பாடங்கள், தேர்வு நடைபெறும் நாள் போன்ற விவரங்களை மாணவர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும். இதில் பிழை இருந்தால், தேர்வுத் துறை கூடுதல் செயலரை (மேல்நிலை) தொடர்பு கொள்ளலாம்.

   வினியோக மையங்களில், ‘ஹால் டிக்கெட்’ கிடைக்காதவர்கள், உரிய தேதிக்குள் விண்ணப்பம் செய்ததற்கான ஆதாரங்களுடன் தேர்வுத்துறை கூடுதல் செயலரை அணுகலாம். மெட்ரிக்., ஆங்கிலோ இந்தியன் தனித்தேர்வர்களுக்கு, 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


online tamil news

இனி வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லவேண்டாம் வீட்டில் இருந்தே கம்ப்யூட்டரில் பதிவு செய்யலாம்

     தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்கள், "கம்ப்யூட்டர் நெட் ஒர்க்' மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், செப்., 15ம் தேதி முதல் வீட்டில் இருந்தபடியே கல்வித் தகுதியை பதிவு செய்யும் வசதி துவங்குகிறது.                  
            தமிழகத்தில் 32 மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும், 4 சிறப்பு வேலை வாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. இவற்றில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு முடிந்ததும் 10, பிளஸ்2 மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய ஏராளமானோர் இந்த அலுவலகங்களை முற்றுகையிடுகின்றனர்.
           இவர்கள் தவிர பட்டதாரிகள், பி.எட்., உட்பட தொழிற்கல்வி முடித்தோரும் பல ஆயிரம் பேர் வருகின்றனர். இதனால் எந்நேரமும் கூட்டம் அலைமோதுகிறது. பதிவு, புதுப்பித்தல் போன்றவையே பிரதான பணியாக இங்கு உள்ளது. இப்பணியை எளிமைப்படுத்த தற்போது அனைத்து மாவட்ட அலுவலகங்களும் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கில் இணைக்கப்பட்டுள்ளன.  இப்புதிய வசதியை நாளை (செப். 15) காலை 11 மணிக்கு  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் துவக்கி வைக்கிறார்.
             இவ்வசதி மூலம் இனி கல்வித் தகுதியை, அவரவர் வீட்டில் இருந்தபடியே "ஆன்லைனில்' பதிவு செய்யலாம். 
            அதற்கான இணையதள முகவரி:  www.tnvelaivaaippu.gov.in   

online tamil news

சோலார் சுனாமி

            சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக பூமி உள்ளி்ட்ட கிரகங்களை மின் காந்த கதிர்வீச்சுக்கள் தாக்கவுள்ளன.
          சோலார் சுனாமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கதிர்வீச்சால் சில பாதிப்புகள் ஏற்படலாம்.
       சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது.
       இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது.
        அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட காமா கதிர்கள் தான் போட்டான்களாக மாறி நமக்கு சூரிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. இந்த போட்டான் கதிர்கள் சூரியனின் மையப் பகுதியில் இருந்து அதன் வெளிப்பகுதிக்கு வரவே 10,000 முதல் 1.7 லட்சம் ஆண்டுகள் வரை ஆகும்.
          சூரியனில் நடக்கும் இந்த அணு உலை இணைப்பின்போது உருவாகும் கூடுதலான சக்தியும் வெப்பமும் சூரிய வெடிப்புகளாக அவ்வப்போது வெளியேறுகிறது. அப்போது சூரியனிலிருந்து அதிக வெப்பத்திலான வாயுக்கள் பிளாஸ்மாவாக பீய்ச்சிடிக்கப்படும். (super heated gases தான் பிளாஸ்மா).
          இந்த பிளாஸ்மா தன்னுடன் சுமந்து வரும் பயங்கரமான மின் காந்த கதிர்கள் பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றன. பூமியி்ல் உள்ள வளிமண்டலமும் அதிலுள்ள வாயுக்களும் நம்மை இந்த மின்காந்த கதிர்வீச்சுக்களில் இருந்து பாதுகாத்து விடுகின்றன.
          இல்லாவிட்டால் சூரியனின் பிளாஸ்மா அலைகள் தாக்குதலில் பூமி என்றைக்கோ பஸ்மாகியிருக்கும்.
           இந் நிலையில் சூரியனின் வட பகுதியில் இன்னொரு மகா வெடிப்பு நடந்திருக்கிறது. சூரியனில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் அகலமே நமது பூமியின் அளவைவிட பெரியது என்கிறார்கள்.
         பூமியை நோக்கிய திசையில் இந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதை பல தொலைநோக்கிகளும் பல செயற்கைக்கோள்களும் கடந்த ஜூலை 31ம் தேதி பதிவு செய்துள்ளன.
        இதனால் கிளம்பிய கதிர்வீ்ச்சுக்களும் மின் காந்த அலைகளும் சூரியனில் இருந்து 93 மில்லியன் மைல்கள் வரை பரவியுள்ளன.
         நமது காற்று மண்டலத்தின் உபயத்தால் இதனால் பூமிக்கு பெரிய அளவில் பாதி்ப்பு ஏதும் இருக்காது என்றாலும் சில செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
          அதே நேரத்தில் இன்று இரவு இந்த மின்காந்த கதி்ர்வீச்சுக்கள் பூமியை அடையும்போது அதன் துருவப் பகுதிகளில் (ஆர்க்டிக், அண்டார்டிகா பகுதிகள்) Auroa Borealis எனப்படும் மாபெரும் பல நிற வெளிச்சம் உருவாகும். வானில் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு நீளும் இந்த வெளிச்சம், பூமியை மின் காந்த அலைகள் தாக்குவதின் எதிரொலி தான்.