Wednesday, September 1, 2010

Online tamil news

வி.ஐ.டி., பல்கலையில் நான்கு புதிய படிப்புகள் துவக்கம்
          வி.ஐ.டி., பல்கலை, நியூயார்க் அரசு பல்கலையுடன் இணைந்து நான்கு புதிய படிப்புகளை துவக்குகிறது.

         வி.ஐ.டி., பல்கலை, அமெரிக்காவின் நியூயார்க் அரசு பல்கலையுடன் இணைந்து, பி.எஸ்., மேனுபேக்சரிங் இன்ஜினியரிங் டெக்னாலஜி, எம்.எஸ்சி., மேனுபேக்சரிங் இன்ஜினியரிங் டெக்னாலஜி, பி.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.எஸ்சி., சாப்ட்வேர் டெக்னாலஜி ஆகிய நான்கு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது.

        இப்பாடத்திட்டங்கள், சர்வதேச தரத்துடன் மாணவர்களின் வாய்ப்புகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வி.ஐ.டி., பல்கலை அலுவலகம் மற்றும் வி.ஐ.டி., சென்னை நிர்வாக அலுவலகத்தில் வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள், நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment