பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க இன்று முதல் தடுப்பூசி
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.
சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் தடுப்பூசி திட்டம், தேவைப்படும் மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பன்றிக்காய்ச்சல் நோய் வராமல் ஆரம்பத்திலேயே தடுக்க இரு வித மருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மூக்கு வழியாக போடப்படும் ‘நேஷோ வேக்’ தடுப்பு மருந்து, தடுப்பூசியாக போடப்படும் ‘வேக்சி ஃபுளூ எஸ்’ என்ற மருந்து தமிழகத்தில் முதல் முறையாக கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்ட் டிடியூட்டில் பொதுமக்களுக்கு சலுகை கட்டணத்தில் இன்று காலை 10 மணி முதல் போடப்படுகிறது. நேஷோ வேக் ணீ150, வேக்சி ஃபுளூ எஸ் ணீ250 கட்டணத்தில் கிடைக்கும்.
முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இந்த தடுப்பு மருந்து, தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். பொதுமக்களுக்கு வசதியாக பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச தொலைபேசி நம்பர் ஒன்றை வெளியிட உள்ளது. இந்த இலவச எண் மூலம் பொதுமக்கள் பதிவு செய்துவிட்டு வரலாம். பன்றிக்காய்ச்சல் எனப்படும் எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

No comments:
Post a Comment