| மாணவர்கள் சேகரிதித்த 3.75 லட்சம் புத்தகங்கள் ஒப்படைப்பு |
சென்னை பல்கலை, கல்லூரி மாணவர்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்து 3 லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைப்பதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசிடம் வழங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில், ‘படித்ததை பிறருக்கு படிக்க கொடுப்போம்’ திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை, அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் திருவாசகம் பேசியதாவது: கடந்த ஜனவரி 26ம் தேதி, சென்னை பல்கலை, கல்லூரி மாணவர்கள் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் 69 ஆயிரம் பேர் புத்தகம் சேகரிக்கும் திட்டத்தில் ஈடுபட்டனர். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரத்தில், ஐந்து லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் நூலகத்தில் வைப்பதற்கு தகுதி வாய்ந்த 3 லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையும், துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜனும் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 27 ஆயிரம் புத்தகங்களை வழங்கியுள்ளனர். அதிகளவிலான புத்தகங்களை சேகரித்த புதுக்கல்லூரி மாணவர்கள் கதீர் அகமது (23 ஆயிரத்து 550 புத்தகங்கள்), இர்பான் பாஷா (19 ஆயிரத்து 850 புத்தகங்கள்), சோகா இகேடா கல்லூரி மாணவி லட்சுமி (18 ஆயிரம் புத்தகங்கள்) ஆகியோருக்கு, சென்னை பல்கலையில் முதுநிலை படிப்பில் அவர்கள் விரும்பிய பிரிவில் இடம் வழங்கப்படும். இம்மாணவர்கள் கட்டணமும் செலுத்த தேவையில்லை. |
Wednesday, September 1, 2010
Online tamil news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment