"பாதுகாப்புப் படையினர் வசம் வந்தது'
காமன்வெல்த் போட்டி நடைபெறும் பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் வசம் வந்துள்ளது. 17 ஆயிரத்து 500 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், 3 ஆயிரம் கமாண்டோக்கள், 15 வெடிகுண்டு செயல் இழப்பு குழுக்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போட்டி நடைபெறும் மைதானங்கள், விளையாட்டு கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்திய விமானப்படை மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட 150 சிறப்பு ஆயுதத் தடுப்பு குழுவினர், தேசிய பாதுகாப்புப் படையினர் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வீரர்கள் தங்கும் விளையாட்டு கிராமம் பகுதியில் சுமார் ஆயிரம் ஆயுதமேந்திய பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றார்.போட்டிகளுக்காக சாலைகள் முடக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தத்வால், "குறிப்பிட்ட சில சாலைகளில் மட்டுமே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை மட்டுமே இந்தத் தடை அமலில் இருக்கும். இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இப்போது நிலைமை மிகவும் சீரடைந்துள்ளது என்றார் அவர்
No comments:
Post a Comment