முகவரி அடையாள அட்டை' : தபால் துறையில் அறிமுகம்
"முகவரி அடையாள அட்டை' திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட், புதிய காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் போன்றவற்றிற்கு முகவரிக்கான அத்தாட்சி கேட்கப்படுகிறது. இதற்காக ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற தேவைகளுக்கு பயன்படுத்த "முகவரி அடையாள அட்டை'திட்டத்தை தபால்துறை அறிமுகம் செய்துள்ளது. மாவட்ட தபால் நிலையத்தில் இதற்கான விண்ணப்பம் ரூ.10க்கு தரப்படுகிறது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ. 240 கட்டணம் செலுத்த வேண்டும். முகவரி குறித்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். பின் மத்திய அரசு, தபால்துறை முத்திரையுடன் லேமினேசன் செய்யப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை 3 ஆண்டுகளுக்கு செல்லும்.
No comments:
Post a Comment