Saturday, September 4, 2010

காமன்வெல்த் போட்டி-டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் பட்டாசுகளுக்குத் தடை-சிவகாசிக்குப் பாதிப்பு

      டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடக்கவிருப்பதால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பட்டாசுகளை இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியில் பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இம்மூன்று மாநிலங்களிலும் பட்டாசு இருப்பு வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
         

No comments:

Post a Comment