Thursday, September 9, 2010

online tamil news

குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் 'நான்ஸ்டிக்': கொழுப்புச்சத்தை அதிகரிப்பதாக தகவல்

Non Stick

               நான் ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பேராபத்து ஏற்படுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

         உணவில் அதிக எண்ணெய் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் நான்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கின்றனர். இந்த பாத்திரங்களில் சமைக்க குறைந்த அளவு எண்ணெய் தான் தேவைப்படும். குறிப்பாக தயாரிக்கப்படும் உணவு பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது. இது தான் நான்ஸ்டிக்கின் சிறப்பு அம்சம்.

             ஆனால், அதிக எண்ணெய் பயன்பாட்டால் கொழுப்புச்சத்து அதிகரிக்கிறது. நான்ஸ்டிக்கை பயன்படுத்தினால் கொழுப்புச் சத்தைக் குறைக்கலாம் என்று நினைப்பது தவறாகும்.

           கொழுப்புச் சத்தைக் குறைக்க நான்ஸ்டிக்கை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது மாறாக குழந்தைகளின் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

           உணவுப் பொருட்கள் பாத்திரத்தில் ஒட்டாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்கள் உணவின் கொழுப்புச்சத்தை அதிகரிக்கின்றன. இதில் தயாரிக்கப்படும் உணவை உட்கொள்ளும் குழந்தைகளின் கொழுப்புச்சத்தும் அதிகரிக்கிறது. இவற்றால் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.

         நான்ஸ்டிக் பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்க பூசப்படும் பெர்புலோரோ அல்சைல் தான் கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment