தில்லி நேரு ஸ்டேடிய நடைபாலம் சரிந்தது
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ள முக்கிய அரங்கங்களில் ஒன்றான ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்திலுள்ள நடைபாலம் சரிந்து 27 பேர் காயமடைந்தனர்.
ஸ்டேடியத்துக்கு வெளியே 95 மீட்டர் நீளமுள்ள இந்த நடைபாலம், மேம்பாலத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வந்தது. | 10.5 கோடி செலவில் சண்டீகரைச் சேர்ந்த பிஎன்ஆர் இன்பிரா நிறுவனம் இந்தப் பணியை நடத்தி வந்தது.சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு தில்லி பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நடைபாலம் கட்டுமான பணி முடிந்த பின்னர் போட்டியை பார்க்க வருவோருக்காக திறக்கப்பட இருந்தது. வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த நடைபாலம் வழியாக ரசிகர்கள் ஸ்டேடியத்துக்கு வருவதற்கு எளிதாக இருப்பதற்காக பாலம் கட்டப்பட்டது. ஆனால் அதற்குள் பாலம் இடிந்து விழுந்துவிட்டது.
அக்டோபர் 3-ம் தேதிக்குள் பாலம் மீண்டும் கட்டப்பட்டுவிடும் என்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.இந்த ஸ்டேடியத்தில் போட்டியின் துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.நேரு ஸ்டேடியத்தின் முன்பகுதியில் மேல்கூரை அமைத்தபோது திங்கள்கிழமை சரிந்து விழுந்தது. இதில் 2 போலீஸôர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment