Monday, September 13, 2010

online tamil news

 தூர்தர்ஷன் தேர்வில் முறைகேடு 25 பேர் நியமனம் ரத்தானது
      தூர்தர்ஷனில் நிருபர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, 25 பேரின் நியமனத்தை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. 
         பிரசார் பாரதி, சமீபத்தில், தூர்தர்ஷனுக்காக நிருபர்களையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களையும் தேர்வு செய்வதற்காக, மூன்று கட்ட தேர்வை நடத்தியது. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குரல் தேர்வு போன்றவை நடத்தப்பட்டன. முதலில், 25 பேரை தேர்வு செய்ய திட்டமிட்ட பிரசார் பாரதி, கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கையை, 35 ஆக உயர்த்தியது. இத்தேர்வை எழுதிய பத்திரிகையாளர் ஒருவர், தேர்வு முறையில் நிறைய மோசடிகள் நடந்துள்ளதாக மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் புகார் கூறினார்.
       "எழுத்துத் தேர்வு எழுதிய பலருக்கு மதிப்பெண்கள் மிக குறைவாக போடப்பட்டுள்ளன. நேர்முகத் தேர்வில் சிலருக்கு கூடுதல் மதிப்பெண்கள் போடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளாத பலரும், இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். "குறிப்பாக, எம்.பி.,யின் மகள் ஒருவரும், மத்திய அமைச்சர் கிருஷ்ணா திராத்தின் மகள் யாஷ்வியும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ளாத இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், அரசியல் நோக்கோடு இந்த தேர்வு நடைபெற்றுள்ளது என்பது தெரிகிறது. "அது மட்டுமல்லாது அனிதா கல்ரா கலா என்பவர், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கவேயில்லை. அவர் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என, தெரியவில்லை' என, புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
       இம்மனுவை மத்திய நிர்வாக தீர்ப்பாய தலைவர் வி.கே.பாலி விசாரித்தார். பிரசார் பாரதி தேர்வு செய்ததில் நிறைய முறைகேடுகள் இருப்பதால், புதிதாக தேர்வு செய்யப்பட்ட 25 பேரின் நியமனத்தை ரத்து செய்வதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment