போலீசார் எழுத்து தேர்வு
- ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தின் மூலம் இரண்டாம் நிலை போலீசார் தேர்வு எழுதிய 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- இயக்குனர் ராமமூர்த்தி தலைமையில் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இரண்டாம் நிலை போலீசார் தேர்வுக்கு இந்த மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆகஸ்ட் 8-ல் எழுத்துதேர்வு நடந்தது.
- இந்த மையத்தில் பயின்ற 250 பேர் எழுத்து தேர்வு எழுதினர். ஆயக்குடியை சேர்ந்த வடிவேல்(26), ராஜலிங்கம்(27), பாலாஜி(22), பழனிச்சாமி(27) உட்பட 35 பேரும், தேனி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூரை சேர்ந்த 200 பேர், மொத்தம் 235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment