விவசாய பம்ப் செட்டுகளுக்கு விரைவில் மீட்டர்
விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையடுத்து, விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மீட்டர் பொருத்தும் நடவடிக்கை வரும் காலத்தில் விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதில் கொண்டு வந்துவிடும் என்றும் அவர்கள் அச்சப்படுகின்றனர்.
விவசாயிகளுக்குப் புதிதாக மின்மோட்டார்கள் இலவசமாக மாற்றித் தரப்படும் எனமுதல்வர் கருணாநிதி அறிவித்தார். தமிழகத்தில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் விவசாய பம்ப் செட்டுகள் திறன் குறைவாக இருப்பதால், மின்சாரம் அதிகமாகச் செலவாகிறது என்றும், மின்பற்றாக்குறை ஏற்படுவதற்கு இந்த பம்ப் செட்டுகளும் ஒரு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் சிறு, குறு விவசாயிகளுக்கு இலவசமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 50 சத மானியத்திலும் மின்மோட்டார்கள் மாற்றித் தரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மின்மோட்டார் வழங்கும் திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. மின்வாரியம் மூலமாக விவசாயிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment