Wednesday, September 1, 2010

Online tamil news

ஒரு டிக்கெட் கட்டணத்தில் 2 பேர் விமான பயணம்
ஏர் இந்தியா நிறுவனம் புதிய சலுகை
 
          மழைக்காலத்தை முன்னிட்டு ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகள் விவரம் வருமாறு:-
 
         சாதாரண எகனாமி வகுப்பு கட்டணம் செலுத்தும் பயணிகள், எக்சிக்யூடிவ் வகுப்பில் பயணம் செய்யலாம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கை இல்லாநிலையோ அல்லது மாற்று ஏற்பாடு செய்யும் சூழலோ ஏற்பட்டால், அவர்கள் எகனாமி வகுப்பில்தான் பயணம் செய்ய வேண்டும். இதனை காரணம் காட்டி, கட்டணத்தை திருப்பித்தர கோரமுடியாது.
 
மற்றொரு சலுகையாக, முழு எகானமி வகுப்பு கட்டணம் செலுத்தும் பயணிகள் தங்களுடன் ஒரு வரை எகனாமி வகுப்பில் அழைத்து செல்லலாம். அவர்களுக்கு எக்சிக்யூடிவ் வகுப்பு சலுகை வழங்கப்படாது.

அதே போன்று முழு எக்சிக்யூடிவ் கட்டணம் செலுத்தும் பயணிகள் தங்களுடன் அதே வகுப்பில் ஒருவரை இலவசமாக அழைத்து செல்லலாம்.
 
மற்றொரு சலுகையாக ரெயின்போ என்ற சூப்பர் சேவர் பேக்கை ஏர் இந்தியா அறிமுகம் செய்கிறது. இதன் படி ரூ.21 ஆயிரத்து 328க்கு 4 கூப்பன்கள் தரப்படும். அதை பயன்படுத்தி ஏர் இந்தியா/இந்தியன் ஏர்லைன்ஸ் என்று குறியிட்ட அனைத்து விமானங்களிலும் பயணம் செய்து கொள்ளலாம். ஒரு முறை செல்ல ஒரு கூப்பன் கட்டணமாக வசூலிக்கப்படும்.
 
ஆனால், டில்லியில் இருந்து திருவனந்தபுரம், கோவை, கோழிக்கோடு, கொச்சி செல்லும் விமா னங்களுக்கு மட்டும் ஒரு கூப்பனுக்கு பதில் 2 கூப்பன்களை அளிக்க வேண்டும். இந்த சலுகையும் செப்டம்பர் 30-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
 
மேலும் விவரங்களுக்கு 1800 180 1407 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஏர் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment