Saturday, September 4, 2010

Online tamil news

ஊக்க மருந்து பயன்படுத்திய இந்திய தடகள, மல்யுத்த வீரர்கள் சஸ்பெண்ட்

             ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இந்திய மல்யுத்த வீரர்கள் சுமித், மோசம் கத்ரி, ராஜீவ் தோமர், வீராங்கனை குர்சரன்ப்ரீத் கெளர் ஆகியோர் சிக்கியுள்ளனர்.

         இவர்களிடம் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி நடத்திய சோதனையில் இது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நான்கு பேரையும் இந்திய மல்யுத்த சம்மேளனம் தடை செய்துள்ளது.

         இவர்களுக்குப் பதிலாக நார்சிங் பாஞ்சம் யாதவ் (74 கிலோ), அனில் மான் (96 கிலோ), பிரவீன் (120 கிலோ) ஆகியோரும், மாற்று வீராங்கனையாக அன்ஷு தோமரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

         ஊக்க மருந்து பயன்படுத்தி சிக்கியுள்ள தோமர் சமீபத்தில்தான் அர்ஜூனா விருது பெற்றார் .

        தடகளப் பிரிவில், குண்டு எறிதல் வீரர் சவுரவ் விஜ், வட்டு எறிதல் வீரர் ஆகாஷ் அன்டில் ஆகியோரும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி உள்ளனர். அவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment