டில்லி காமன்வெல்த் போட்டிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் வருகிற அக்டோபர் மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனையடுத்து காமன்வெல்த் போட்டிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டி நடைபெறும் மைதானங்கள் வருகிற 7ம் தேதி முதல் டில்லி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
காமன்வெல்த் போட்டியில் 71 நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிகள் நடைபெறும் 13 மைததானங்களுக்கும் விளையாட்டு வீரர்களை பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் விளையாட்ட வீரர்கள் போக்குவரத்துக்காக 574 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment