அயோத்தி: ராமர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை
- அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு கூறப்படுவதை அடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக ராமர் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கோவிலில் தினமும் ஏராளமான இந்துக்கள் வந்து வழிபாடு நடத்தி வந்தனர்.
- தினமும் 7 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரம் வரை பக்தர்கள் வரை வருவார்கள். முக்கியமான காலங்களில் 15 ஆயிரம் பக்தர்கள் வரை வருவது உண்டு.
- இந்நிலையில் அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு கூறப்படுவதை அடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வழிபாடு நடத்த வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அயோத்தி கோர்ட்டு தீர்ப்பு விவகாரம் வந்ததில் இருந்தே சமீப காலமாக பக்தர்கள் வருவது மிகவும் குறைவாக இருந்தது. (டிஎன்எஸ்)
No comments:
Post a Comment