Thursday, September 23, 2010

online tamil news


துவக்க விழாவில் பாடுகிறார் ரஹ்மான்

          "ஜெய் ஹோ', "மாதுஜே சலாம்', "வந்தே மாதரம்'  மற்றும் வைஷ்ணவ ஜனதோ ஆகிய பாடல்களை காமன்வெல்த் தொடக்க விழா நிகழச்சியில் ஏ.ஆர், ரஹ்மான் பாடவுள்ளார். 
          காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் சுமார் 60 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
         இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கான மைய நோக்கு பாடல்கள் பெரிய திரையில் பிரமாண்டமான முறையில் திரையிடப்படும்.   மேலும் தில்சே படத்தில் அவர் இசையமைத்த சையா, சையா பாடலுக்கு 1500 கலைஞர்கள் ஆடுகின்றனர். 
             ஏற்கெனவே ரஹ்மான் பாடி பெரிய வெற்றியடைந்த வந்தே மாதரம், மாதுஜே சலாம், ஆகிய பாடல்களை அவரது சொந்த குரலில் ஏ. ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் பாடுவார். ஆஸ்கார் விருதைப் பெற்றுக் கொடுத்த ஜெய் ஹோ பாடலையும் மேடையில் பாடவுள்ளார் ரஹ்மான். மகாத்மா காந்தியின் நினைவாக அவருக்கு மிகவும் விருப்பமான வைஷ்ணவ ஜன தோ பாடலும் மேடையில் பாடப்படும். அந்தப் பாடலையும் ஏ.ஆர். ரஹ்மான் பாடுகிறார். துவக்க விழா நிகழ்ச்சிகளில் பிரபல பாடகர் ஹரிகரனும் பாடவுள்ளார்.  
            அதைத் தொடர்ந்து சுமார் 900 டிரம்ஸ் இசைக் கலைஞர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியும் இடம்பெறும். இது குறித்து போட்டி ஏற்பாடுகளுக்கான கலைக்குழு தலைவர் பாலா கூறுகையில், "கடந்த 14 மாதங்களாக நாங்கள் பணி செய்து வருகிறோம். துவக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் இந்தியாவின் தனித்தன்மையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைப்பதாக அமையும். இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக மட்டும் 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.

No comments:

Post a Comment