மதிப்பெண் பட்டியலில் தாயின் பெயர்
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் மதிப்பெண் பட்டியலில் இனி தாயின் பெயரையும் சேர்க்க வேண்டும் என, ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் தந்தை பெயர் மட்டும் வெளியிடப்பட்டு வந்தது. தந்தை பெயருடன், தாயின் பெயரையும் சேர்க்க வேண்டும் என, ஆந்திர மாநில கல்வித் துறைக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான மனுக்கள் வந்தன.
பின்னர் 2010-11 கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலில் தந்தை பெயருடன், தாயின் பெயரையும் சேர்த்து பிரசுரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது, தாயின் பெயர் மட்டுமே இருந்தால் போதும் என கோரினாலும், தந்தை பெயர் மட்டும் போதும் என தெரிவித்தாலும் அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும். தாய், தந்தை இருவரின் பெயரையும் சேர்க்க வேண்டுமென மாணவர்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்தால், அதன் படி இருவரின் பெயரும் சேர்க்கப்படும். மாணவர்களின் சுயமுடிவின் படி மதிப்பெண் பட்டியலில் தந்தை, தாயாரின் பெயர் சேர்க்கப்படும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment