காவலர் பணி: அக்டோபர் 4 முதல் உடல் தகுதித் தேர்வு
தமிழக காவல் துறையில் 10,117 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி முதல் உடல் தகுதித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர்கள் என மொத்தம் 10,117 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இதற்காக விண்ணப்பித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 8-ம் தேதி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மையங்களில் நடைபெற்றது.இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்தகட்டமாக உடல் தகுதி திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். அந்தத் தேர்வில் பங்கேற்க தகுதிப் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் திறன் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி முதல், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், தருமபுரி, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 14 மையங்களில் நடைபெற உள்ளன.
இணையதள முகவரி:www.tn.gov.intnusrb
No comments:
Post a Comment