Tuesday, September 21, 2010

online tamil news

பன்றிக் காய்ச்சலை சித்த மருந்துகள் தடுக்கும்: சித்த மருத்துவ அதிகாரி

          பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் ஆற்றல் சித்த மருந்துகளுக்கு உண்டு என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். 
         இப்போது பன்றிக் காய்ச்சலைத் தடுக்க அலோபதி முறையில் மூக்கில் தடுப்பு மருந்து ஸ்பிரே செய்தல் அல்லது தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பு மருந்துக்கு சென்னை மாநகராட்சி சோதனைக்கூடங்களில் ரூ.100-ம், தடுப்பூசிக்கு ரூ.200-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
           சித்த மருந்துகள் என்ன? கபத்துக்கு உரிய நோய்க்குறிகளையே பன்றிக் காய்ச்சலும் கொண்டுள்ளதால், நிலவேம்புக் குடிநீரை உள்ளடக்கிய "கபசுரக் குடிநீர்' (தூள்), உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை அளிக்கக்கூடிய "பிரம்மானந்த பைரவம்' மாத்திரை, "அமுக்கரா' மாத்திரை ஆகியவற்றை சாப்பிட்டால் போதுமானது. 
               அதாவது, "கபசுரக் குடிநீரை' (தூள்) நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் 40 மில்லி சாப்பிட வேண்டும்; அத்துடன் பிரம்மானந்த பைரவம் ஒரு மாத்திரை, அமுக்கரா 2 மாத்திரை ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இவ்வாறு தொடர்ந்து 3 நாள்கள் சாப்பிட்டாலே பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு உரிய ஆற்றல் உடலுக்குக் கிடைத்து விடும்.

No comments:

Post a Comment