சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை
- சத்துணவில் வாரம் 5 நாள்களுக்கு முட்டை வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
- சத்துணவில் 5 நாள்களுக்கு முட்டை: மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில் 3-6-1989 முதல் 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டது.
- 2006-ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் வாரம் இரண்டு முட்டைகள் வழங்கப்பட்டன.
- 15-7-2007 முதல் வாரம் மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக பள்ளிக் கூடம் நடைபெறும் 5 நாள்களிலும் இனி முட்டை வழங்கப்படும்.
No comments:
Post a Comment