| வி.ஏ.ஓ., தேர்வுக்கு தினமலரின் இலவச வழிகாட்டி பயிற்சி |
| தினமலர் சார்பில் மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (செப்.,18) நடக்கிறது. |
| தமிழக அரசில் காலியாக உள்ள 2500 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ. ஓ.,) பணியிடங்களை விø ரவில் டி.என். பி.எஸ்.சி., நிரப்ப உள்ளது. தமிழகம் முழுவதும் 12 லட்சத்திற் கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான எழுத்துத் தேர்வு விரைவில் நடக்க உள்ளது. இதற்கு வாசகர்களை தயார் செய்யும் பொருட்டு வழிகாட்டி முகாமை, தினமலர் நடத்துகிறது. நாளை காலை 10.30 முதல் மதியம் 12.30 மணி வரை பெண்களுக்கும், மாலை 4 முதல் 6 மணி வரை ஆண்களுக்கும் நடக்கிறது. மதுரை மாநகராட்சி துணை கமிஷனர் தர்ப்பகராஜ் துவக்கி வைக்கிறார். மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் பொது அறிவு, ஆசிரியர் ராஜ்மோகன் தமிழ்ப் பாடம் குறித்து கருத்துரை வழங்குகின்றனர். வி.ஏ.ஓ., தேர்வெழுத காத்திருக்கும் அனைவரும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். அனுமதி இலவசம். |
Friday, September 17, 2010
online tamil news
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment