Sunday, September 12, 2010

online tamil news

புற்றுநோயாளிகளுக்கு உதவ வரும் 26ல் "ஜம்பிள்' சேல்ஸ்
 
         வசந்தா நினைவு அறக்கட்டளை அறிக்கை:புற்றுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வகையில் 1993ல் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்; பெரும்பாலானோர் குணமடைந்துள்ளனர். 

          2000ம் ஆண்டிலிருந்து இருந்து "ஜம்பிள் சேல்ஸ்' நடத்தப்பட்டு வருகிறது. இதில் திரட்டப்படும் நிதியில் ஏழை புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான "ஜம்பிள் சேல்' வரும் 26ம் தேதி, ஆர்.எஸ். புரத்தில் உள்ள அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. 

         பொதுமக்களிடம் இருந்து பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள், வண்டிகள், பொம்மைகள், எலக்ட்ரானிக் சாதனங்களை இலவசமாக பெறப்படுகிறது.

           ஜம்பிள் சேலுக்கு இலவசமாக பொருட்களை கொடுக்க விரும்புவோர், வரும் 18ம் தேதிக்குள் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை எதிரில் உள்ள கிருஷ்ணா மில் குடோனில் தினமும் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணிக்குள் நேரில் வந்து தரலாம். 

          விபரங்களுக்கு, 98940 89379, 98431 90263, 98657 29733 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment