போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க வேண்டும்
போலி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போர் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உணவுப் பொருள் வழங்கல் அலுவலர்களிடம் 2 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏழை, எளியவர்கள் உள்பட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் பொதுவிநியோகத் திட்டம் மூலம் தட்டுப்பாடின்றி கிடைக்க உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கவும் அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் போலி ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
போலி ரேஷன் அட்டைகள் வைத்திருப்போர், அவற்றை உடனடியாக அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறினால், அவர்கள் மீது அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment