பன்றிக் காய்ச்சல்: ஆஸ்துமா இருந்தால் மூக்கில் தடுப்பு மருந்து வேண்டாம்
ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்காக மூக்கில் போடப்படும் தடுப்பு மருந்தை போட்டுக் கொள்ளக் கூடாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
"சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையம், சென்னை மாநகராட்சி சார்பில் நகரில் 5 பகுப்பாய்க் கூடங்களில் கட்டண அடிப்படையில் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து (மூக்கின் இரண்டு துவாரங்களிலும் ஸ்பிரே செய்தல்) அல்லது தடுப்பு ஊசி போடப்படுகிறது. கிண்டி கிங் ஆய்வு மையத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 3,395 பேருக்கு தடுப்பு மருந்து அல்லது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்ட பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு மூக்கில் தடுப்பு மருந்து விடுதல் அல்லது தடுப்பூசி போடப்படுகிறது. 3 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்களுக்கும் மூக்கில் தடுப்பு மருந்து விடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ள நிலையில் குடும்ப மருத்துவரின் ஆலோசனையுடன் தடுப்பு மருந்து அல்லது தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.
No comments:
Post a Comment