ஆசிய யோகா: திருப்பூர் வீரருக்குத் தங்கம்
ஆசிய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில், திருப்பூரைச் சேர்ந்த வீரர் ஜாவித் தங்கம் வென்றார். மற்றொரு வீரர் முத்துசுப்பிரமணியம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆசிய நாடுகளுக்கு இடையேயான யோகா போட்டிகள் செப்டம்பர் 4 முதல் 8-ம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்றன. இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இதில், 19 முதல் 25 வயதுக்கு உள்பட்டோருக்கான அர்ட்ஸ்டிக் பேர் பிரிவில் ஜாவித் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும், அர்ட்ஸ்டிக் மற்றும் ஒலிம்பிக் யோகா பிரிவுகளில் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். வெள்ளிப் பதக்கம்: 12 முதல் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான அர்ட்ஸ்டிக் பேர் பிரிவில் திருப்பூர் வீரர் முத்துசுப்பிரமணியம் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இப் போட்டியில் பதக்கம் வென்றதன் மூலம் முத்துசுப்பிரமணியம் மற்றும் ஜாவித் இருவரும், அக்டோபர் மாதம் ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற உள்ள யோகா போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆசியப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த திருப்பூர் வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment