அதிகம் பேருக்கு இந்தியாவில் இதயம் பாதிக்க வாய்ப்பு உண்டு
"20 வயது முதல் 40 வரை உள்ளோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இருதய நோய் வராமல் காக்க உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் அவசியம்,'' என, அப்போலோ மருத்துவமனை டாக்டர் செங்கோட்டுவேலு தெரிவித்தார்
உலகமெங்கும் சர்வதேச இதய தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை அப்போலோ மருத்துவமனை முதுநிலை இண்டர்வென்ஷனல் இதய நோய் டாக்டர் செங்கோட்டுவேலு கூறியதாவது:
இந்தியாவில் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படுகிறது. புகைபிடித்தல், சர்க்கரை சத்து பற்றி விழிப்புணர்வு இல்லாததால், இதயம் பாதிக்கிறது; உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது. ஒரு நாளில் பாதி நேரம் அலுவலக பணியில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படுகிறது. பணியுடன், உடலையும் பேணுதல் அவசியம். மன உளைச்சல், வேதனை, கவலை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்தல், போட்டி, பொறாமை போன்ற பல்வேறு பிரச்னை, சோதனைகளை சந்திக்க நேரிடும் போது இதயம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
இருதய நோய் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இங்கு இல்லை. எனவே, அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச மக்கள் தொகையில், 60 சதவீதம் பேர் இதயம் பாதித்தவர்கள் இந்தியாவில் இருப்பர்.
No comments:
Post a Comment